Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 3)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது. குழுவொன்று இணைந்து வங்கி நிர்வாக சபை என அடையாளப்படுத்தி, போலி தகவல் வெளியிட்டு பயனாளர்களின் ATM அட்டையின் இரகசிய இலக்கங்களை பெற்றுக் கொள்ளும் மோசடி நடவடிக்கை தொடர்பிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், “அடையாளம் காணப்படாத குழுவொன்றினால் வங்கி நிர்வாக சபை ஊழியர்கள் போன்று செயற்பட்டு, வாடிக்கையாளர்களின் ATM அட்டையில் உள்ள தரவுகளை கையில் கொண்டு செல்லும் இயந்திரத்தில் பெற்று கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் தரவுகளில் தங்கள் வங்கி ... Read More »

தொழில் நிறுவனங்களையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கும் செயலி

பணியாளர்களை தேடும் தொழில் நிறுவனங்களையும் தொழில் தேடும் பணியாளர்களையும் இணைக்கும் வகையில் புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக பல நிறுவனங்கள் மாத்திரமின்றி வேலை கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்களும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. “ஹையர் மீ” என்னும் நிறுவனமே குறித்த செயலியை அறிமுகம் செய்தள்ளது. உங்கள் தொலைபேசியின் கூகுள் பிளே ஸ்ரோறில் “ஹையர் மீ” என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ஸ்சை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் இலவசமாக பெயர், முகவரி, புகைப்படம், வீடியோக்கள், என்பவற்றை பதிவு செய்யலாம். ... Read More »

கனடாவில் பல வாகன மோதலில் இருவர் மரணம் பலர் காயம்

செவ்வாய்கிழமை பிற்பகல் யோர்க் பிராந்தியத்தில் கெஸ்விக் தெற்கு பகுதியில் இடம்பெற்ற பல வாகன மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர் என யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். பிற்பகல் இரண்டு மணியளவில் Ravenshoe வீதி மற்றும் வூட்பைன் அவெனியு பகுதியில் நடந்துள்ளது. ஆறு வாகனங்கள் மோதப்பட்டதாக பல தொலைபேசி அழைப்புக்கள் பொலிசாரருக்கு செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே மரணித்த இருவரின் இனம் தெரிய வரவில்லை. பலர் கடுமையான காயங்களால் துன்புறுவதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Read More »

கனடாவில் பருவகாலத்தின் முதல் பனிபொழிவு

செவ்வாய்கிழமை காலை பருவகாலத்தின் முதல் பனிபொழிவை எட்மன்டன் பெற்றுள்ளது. பலத்த மழை ஒன்று மதியத்திற்கு சிறிது பின்னர் வெள்ளை துகள்களாக மாற தொடங்கி சில்லென்ற ஒரு குளிர்ச்சியை அல்பேர்ட்டா தலைநகர பிராந்தியத்திற்கு கொண்டு வந்துள்ளது. தொடர்ந்தும் இன்றய நாளின் பின்பகுதி பனியுடன் கலந்த மழை கொண்டதாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20மில்லி மீற்றர்கள் மழை முன்கணிப்புடன் நகரின் சில பகுதிகளில் இரண்டு சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் பனி மறைந்து விடும் ... Read More »

நியு யோர்க் பயணத்தின் முதல் நிறுத்தமாக உலக குடியுரிமை விருது பெறும் ட்ரூடோ

நியு யோர்க்- மூன்று நாட்கள் நிகழ்வொன்றிற்காக இன்று நியு யோர்க் பயணமாகும் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று இரவு ஒரு உலக குடியுரிமை விருதை பெறுகின்றார். வருடாந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கலந்து கொள்ள Big Apple நோக்கி பயணமாகின்றார் பிரதமர். உலக அங்கத்தவர்கள் யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் உரையை கேட்பதற்கு சிறிது பின்னராக அங்கு சென்றடைவார். இன்று மாலை அட்லான்டிக் கவுன்சில் சிந்தனையாளர்களினால் சர்வசே வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மைகான இவரது ஆதரவிற்காக கௌரவிக்கப்பட உள்ளார். ஜோர்டான ராணியான ரனியா ... Read More »

20 தொழிலாளர்களுக்கு குளவிக் கொட்டு

தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தனை – குயின்ஸ்பெரி தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவந்துள்ளது. Read More »

விறகு வெட்டச் சென்ற பெண் பரிதாபமாக பலி

டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக ஸ்தலத்திலே​யே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (20) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மரணித்தவர் நான்கு பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் டயகம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read More »

இன்று வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read More »

வடகொரிய எல்லையில் தீவிரம் தொடரும் போர் பயிற்சிகள்

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆறாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ள வடகொரியாவின் செயலால், அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் குவாம் தீவில் இருந்து வந்த அமெரிக்காவின் B-1B ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு, ஜப்பானில் இருந்து வந்த F-35 ரக ஜெட் விமானங்கள் நான்கு, தென்கொரியாவின் F-15K ரகத்திலான நான்கு விமானங்கள் ஆகியவை குண்டு வீச்சு உள்ளிட்ட போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More »

Scroll To Top