Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 30)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு பதவி உயர்வு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Read More »

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூ வீதிக்கு முன்னாள் உள்ள வாவக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சுமார் 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஓப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் Read More »

மாகாண சபைகள் சட்டமூலம் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு

அனைத்து சிவில் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக திருத்தங்களுடனான புதிய மாகாண சபைகள் சட்டமூலம் வரும் 24ம் திகதி பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பொது உடன்பாட்டின் படி இது தாக்கல் செய்யப்பட உள்ளமை விஷேட அம்சமாகும் என்று அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல ... Read More »

கனடா பியர்சன் விமான நிலையப் பயணப் பொதிகள் ஏற்றுவது வழமை நிலையில்

பியர்சன் விமான நிலையப் பிரதிநிதிகள். விமான நிலைய முனையம்(Terminal) இலக்கம் மூன்றில், பொதி ஏற்றி இறக்கும் பொறிமுறையில் இருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு நிலைமை , செவ்வாய் மாலையன்று வழமைக்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளர்கள். செவ்வாய் மாலை இந்தப் பிரச்சினைகள் ஆரம்பித்ததாகவும், மேலதிக ஊழியர்களை வருவித்து , இலகுவான ஒரு முறையில் பயணப் பொதிகள் கையாளப்பபட்டதாகவும் கூறும் அதிகாரிகள், அதே நேரத்தில் திருத்தல் பணிகள் முடக்கி விடப்பட்டதாகவும் இவர்கள் கூறி உள்ளார்கள் . புதனன்று பயணிகள் சமூக ஊடகங்களுக்கு, இந்த ஏற்றுக்கொள்ள முடியாத தாமதத்திற்காக ... Read More »

டிரெம்பின் ஒரே ஒரு ட்வீட்டால் 38 ஆயிரம் கோடி ரூபாயை இழந்த அமேசான் நிறுவனம்

முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமாக அமேசான் வர்த்தக ரீதியில் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் உடன் போட்டி போடும் அளவிற்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு அமேசான் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அமேசான் நிறுவனத்தால் வரி செலுத்தும் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனங்களின் வியாபாரத்தை அமேசான் நிறுவனம் முடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ட்ரெம்பின் இந்த ... Read More »

வாகன் வைத்தியசாலைக்கு மில்லியன் டொலர்கள் வழங்கும் மார்க்கோ முஷோ குடும்பம்

2015-ல் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது பேரன் ஆகியவர்களை போதையில் வாகனம் செலுத்தி கொன்றதற்காக குற்றம் சுமத்தப்பட்ட மார்க்கோ முஷோ குடும்பத்தினரும் மற்றுமொரு பிரபல்யமான ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த குடும்பமும் சேர்ந்து வாகனில் அமைக்கப்பட்டு வரும் புதிய மக்கென்சி சுகாதார மருத்துவ மனைக்கு 15-மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குகின்றனர். இந்த வைத்தியசாலை 2020-ல் திறக்கப்படவுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. முஷோ மற்றும் டி கஸ்பெரிஸ் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட “பெருந்தன்மையான” இந் நன்கொடையில் மருத்துவ மனையின் புதிய ரவர் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »

கியு பெக் எல்லையில்ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 7000அகதி கோரிக்கையாளர்கள்!

LACOLLE, Que–கிட்டத்தட்ட 7,000 அகதி கோரிக்கையாளர்கள் கடந்த ஆறு வாரங்களில் கியுபெக்-யு.எஸ்.எல்லையில் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் 15-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 3,800ற்கும் மேற்பட்ட மக்கள் இடைமறிக்கப்பட்டதாக ஆர்சிஎம்யினர் தெரிவித்துள்ளனர். யூலையில் கிட்டத்தட்ட 3,000-யூன் மாதம் 781ஆக இருந்து இந்த எண்ணிக்கை நான்கு மடங்கெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு எனவும் இத்தகைய எண்ணிக்கையை ஒரு போதும் கண்டதில்லை எனவும் ஆர்சிஎம்பியை சேர்ந்த கஸ்ரொன்கே தெரிவித்துள்ளார். தினமும் சராசரியாக 200 மற்றும் 250 மக்கள் வரை எல்லையை கடக்கின்றனரெனவும் ... Read More »

ராஜபக்ச மீதான நடவடிக்கைக்கு இதுவே காரணம்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சனுடன் கருத்து மோதலில் ஈடுபட்டதன் காரணமாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி குற்றம்சாட்டுகின்றது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாட்டிற்காக உண்மையாக பணியாற்றி வருவதை விரும்பாத அரச சார்பற்ற நிறுவனங்களும் சில வெளிநாடுகளும் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னால் இருப்பதாகவும் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும் ... Read More »

புதிய கடற்படை தளபதியாக சின்னையா

புதிய கடற்படை தளபதியாக ரியர் அத்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வெற்றிடத்திற்காக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »

நள்ளிரவு முதல் வாகன பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

சில வாகனங்களில் உற்கத்திவரியானது நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார். அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த வரியானது 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »

Scroll To Top