Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 4)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்

நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் 72 ஆவது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று உரை­யாற்­ற­வுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை அர­சாங்கம் ஒரு குற்­ற­வாளி என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஐ.நா. உரைக்கு எதி­ரான மக்கள் போராட்­ட­மொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற இருக்­கின்­றது. ஐ.நா. பொதுச்­ச­பையின் வரு­டாந்தக் பொதுக்­கூட்­டத்தில் பங்­கெ­டுக்கும் இலங்கை ஜனா­தி­பதி இன்று 19 ... Read More »

ரொறொன்ரோ வீதிகளில் போக்கு வரத்து பாதுகாவலர்கள்

2018-ஆரம்பத்திலிருந்து ரொறான்ரோ மக்கள் முழு-நேர போக்குவரத்து பாதுகாவலர்களை வீதிகளில் காணக் கூடியதாக இருக்கும்.திங்கள்கிழமை காலை இத்தகவலை ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி அறிவித்துள்ளார். நெரிசல் மோதல் குறித்த இவரது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தகவல் அமைகின்றது. பாதுகாவலர்கள் ஒரு பிரகாசமான ஒறேஞ்ச் கோட் அல்லது பிரகாசமான பச்சை நிற கோட் அல்லது இவர்கள் யார் என்ன செய்கின்றார்கள் என மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள கூடிய வண்ணம் தோற்றமளிப்பார்கள் என மேயர் அவசரமான காலை நேரத்தில் நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நின்ற வாறு தெரிவித்தார். ... Read More »

கனேடிய இராணுவ ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய கனேடிய பிரதமர்

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்ற, கனேடிய இராணுவ ஓட்டப் போட்டியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பங்குபற்றினார். ஒட்டாவா நகர் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற ஐந்து கிலோமீற்றர் ஓட்ட தூரத்தை பிரதமரும் ஓடி நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இராணுவ ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முதல் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பிரதமர் ஓட்ட தூரத்தை 23 நிமிடங்கள் 8 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் 364ஆவது இடத்தை பிரதமர் பெற்றுள்ளார். இவ் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ... Read More »

கனேடிய பிரதமரை சந்தித்தார் தெரேசா மே

கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வரவேற்றுள்ளார். பிரித்தானியப் பிரதமர் நேற்று ஓட்டோவாவைச் சென்றடைந்துள்ள நிலையில், கனேடியப் பிரதமரால் வரவேற்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கும் கனேடியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போது, வர்த்தக உறவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பான விவகாரம் தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, போயிங் நடவடிக்கையை எதிர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற்றுக்குப் பின்னர், வர்த்தக உறவுகளை ... Read More »

சுமந்திரன் கொலை முயற்சி; 05 பேருக்கும் பிணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த 5 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு வழக்கு ... Read More »

எல்லை தாண்டிய 8 மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் இவர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்களை மாலை 04.30 அளவில் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இதற்கமைய, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, யாழ் மாவட்ட நீரியல் வள உதவிப் பணிப்பாளர் து.சுதாகர் தெரிவித்தார். Read More »

விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனிஸ்வரன் வழக்குத் தாக்கல்

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, அந்த மாகாணத்தின் முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி தனக்கு கடிதமொன்றை அனுப்பிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அறிவித்தார் என்று மனுதாரர் பி.​டெனிஸ்வரன் ... Read More »

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த கோர பேரழிவால் தற்போது வரை 119 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி ... Read More »

தீவிரவாதம் குறுகிய கால தீர்வுகளையே எதிர்பார்க்கின்றது

தீவிரவாதம் குறுகிய கால தீர்வுகளையே எதிர்பார்க்கின்றது. ஆனால் நிலையான மற்றும் வெற்றிகரமான பயணமே முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அனைவரும் இதற்காக உதவ வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். தற்போது இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மக்களை, உலகில் சந்தோஷமாகவும் ஒரு ... Read More »

உலகம் முழுவதும் 81 கோடி பேர் பசியால் தவிக்கின்றனர்

உலகம் முழுவதும் 81.5 கோடி பேர் பசியால் தவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் எனவும் இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆபிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் கடந்த ... Read More »

Scroll To Top