Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 5)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

மூன்றாம் உலக மகாயுத்தம் வெடிக்குமா

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான எச் .ஆர் .மக்மாஸ்டர் என்பவர் , வடகொரியாவின் வெள்ளிகிழமை ஏவுகணைச் சம்பவத்தின் பின்னர் , அமெரிக்கா இராணுவத் தாக்குதல் வழியை நாடலாம் என்று தெரிவித்திருக்கிறார். . உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் , வட கொரியா கடந்த வெள்ளியன்று பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தது . “ஆனால் நாம் விரும்புவது அதுவல்ல. உலகநாடுகளை அழைத்து , போரைத் தவிர்க்க எதைச் செய்யலாம் என்பதையே நாம் விரும்புகிறோம் “என்று வெள்ளைமாளிகை அறிக்கை ஒன்றில் இவர் தெரிவித்துள்ளார் . “ தற்போதைய ... Read More »

ரொறொன்ரோவை தொடர்ந்து ஊக்குவிக்கும் Terry Fox Run

புற்று நோய்க்கெதிரான போராட்டத்திற்கு நிதி சேர்க்கும் வருடாந்த நிகழ்வு இன்று- ஞாயிற்றுகிழமை சனத்திரளை High Park திரட்டியுள்ளது. இந்த நிகழ்வு ரொறொன்ரோ மட்டுமன்றி கனடா பூராகவும் பல நகரங்களில் இடம்பெறுகின்றது. 1980ல் ரெறி வொக்ஸ் தனது 22-வது வயதில் கனடா பூராகவும் கரைக்கு-கரை ஒரு செயற்கை மூட்டுடன் ஓட ஆரம்பித்தார். மூன்று வருடங்களிற்கு முன்னர் புற்று நோயினால் தனது வலது காலை இழந்தவர் இவர். இக் கொடிய நோயை எதிர்த்து போராடுவதற்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் ஓட ஆரம்பித்தவர். வருடம் தோறும் இன்றய தினத்தில் ... Read More »

வேக எல்லையை மீறிய கடலோர பாதுகாப்பு கப்பலிற்கு 6000 கனடிய டொலர்கள் அபராதம்

ஒட்டாவா- கனடிய கடலோர பாதுகாப்பு கப்பல் வட அட்லான்டிக்கின்திமிங்கிலங்கள் பாதுகாப்பின் வேக எல்லையை மீறிய காரணத்திற்காக 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.சென்ட்.லோறன்ஸ் வளைகுடாவில் திமிங்கிலங்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடலோர பாதுகாப்பு கப்பல் 10-knot வேக வரம்பை மீறியுள்ளதென கனடா போக்கு வரத்து தெரிவிக்கின்றது. அதாவது 20மீற்றர்களிற்கும் அதிகமாகும். யூன் மாதத்திலிருந்து சென்.லோறன்ஸ் குடாவில் right whale எனப்படும் வகை திமிங்கிலங்கள் 11 இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா அலாஸ்கா எல்லையில் 5 ரிக்டர் நில நடுக்கம்

பிரிட்டிஷ் கொலம்பியா, யுகொன் மற்றும் அலாஸ்கா எல்லையில் சனிக்கிழமை 5.1ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக கனடா நிலநடுக்க பிரிவு தெரிவித்துள்ளது. பசுபிக் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 4.30மணிக்கு சிறிது பின்னராக அதிர்வு ஏற்பட்டுள்ளது. வைற்ஹோசை சேர்ந்த மக்கள் சிறிய ஆட்டம் ஒன்றை உணர்ந்துள்ளனர். ஆனால் எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை. இப்பகுதிகளில் கடந்த மே மாதம் இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. Read More »

காணாமல் போனவர்கள் பற்றிய பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட மாட்டாது

காணாமல் போனவர்களை பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனவர்கள் அனைைவரையும் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இட்டிருந்தது. 2016 மே மாதம் அந்த உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. Read More »

தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது முறிந்து விழுந்த மின்கம்பம்

பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் ஒன்று ஹட்டன் காசல்ரீ சமரவெளி தோட்டத்தில் தொடர் குடியிருப்பு ஒன்றின் மேல் முறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் மக்கள் தமது குடியிருப்பிலிருந்து வெளியில் வருவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் 18.09.2017 மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்த போதும் மின்சார சபையின் திருத்த பணி ஊழியர்கள் நேரம் கடந்த நிலையிலேயே ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த தொடர் குடியிருப்பின் ... Read More »

யாழ். மாவட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ​நேற்றைய (18.09) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரனையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார். இராணுவம் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாது. இராணுவம் வெளியேறிய ... Read More »

தொழில் அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி

மின்சார சேவை தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று மாலை மின்சார சேவை தொழிற்சங்கத்துடன் தொழில்துறை அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிராத்ன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது தம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க ஒன்றமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறினார். தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எழுத்துமுல தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் Read More »

லண்டன் குண்டுவெடிப்பு 18 வயது இளைஞன் கைது

லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர். இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர் ... Read More »

அமெரிக்கர்களின் அடுத்த தலைவலி

ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. “அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஜோஸ் புயலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி ... Read More »

Scroll To Top