Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 763)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

ஜனாதிபதியின் சீனா விஜயம் இந்திய விஜயத்தின் பின்னரே

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் சீனா செல்லவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Read More »

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கை திருநாடடின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வானது (04) காலை 8.00 மணியளவில் பிரதேச செயளாளர் ஜெகதீசன் தலமையில் இடம் பெற்றது . அத்துடன் நாவற்காடு திவிநெகும உத்தியோகஸ்தர் தலமையில் நாவற்காட்டு பிரிவில் மக்களால் சிரமதானம் ஒன்றும் இடம் பெற்றது . Read More »

இலங்கை சுதந்திர தினத்தினை முன்னிட்டு 557 கைதிகள் விடுதலை.

67வது சுதந்திர தின கொண்டாட்டதை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 557 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சந்ராரத்ன பல்லேகம இதனை செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். நீர்கொழும்பு சிறையில் இருந்தே அதிகளவான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து 58 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின்  பேரில் இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம் பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டும் 900 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் ... Read More »

இலங்கை மக்கள் ஒன்றுபட வேண்டும்: சுதந்திரதின விழாவில் சிறிசேனா பேச்சு

மக்களிடையே மனதளவில் ஒற்றுமையை ஏற்படுத்த முன்னாள் தலைவர்கள் தவறிவிட்டனர் என்று வருத்தம் தெரிவித்த  இலங்கை அதிபர் சிறிசேனா, தேசிய நல்லிணக்கத்துக்கு ஒற்றுமை அவசியமானது என்று தெரிவித்தார். இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தையொட்டி  இலங்கை அதிபர் சிறிசேனா  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 1948ல் இருந்து நமது சாதனைகளால் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோமா?. தோல்விகளுக்காக அனைத்து தலைவர்களும்  பழி ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்க செயல்முறையில்  தெற்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின்  இதயங்களை ஒன்றிணைப்பது நமக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஒவ்வொருவர் ... Read More »

பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு ..

தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம்  ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற கார் டாக்சியின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் ... Read More »

‘செழுமையான தாயகம்! அபிமானமான நாளை’ – இலங்கையின் 67வது சுதந்திரதினம்

இலங்கையின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. காலை 9.15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும். ‘செழுமையான தாயகம்! அபிமானமான நாளை’ எனும் தொனிப்பொருளிலேயே இந்த முறை சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கின்றது. பிரதான வைபவம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். முப்படையினரின் மரியாதை அணிவகுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வார். இதன்போது சைத்திய வீதியிலுள்ள கடற்படை ... Read More »

வில்லிசைக் கலைஞான சின்னமணி ஐயாவின் குரல் ஓய்ந்தது!

சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (வில்லிசைக் கலைஞான சோதி, வில்லிசை வித்தகன், வில்லிசைவாணன், வில்லிசை மாமணி) அவர்களின் குரல் ஓய்ந்தது. சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 30, 1936) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார். உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு: சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை ... Read More »

ஜனாதிபதியும், பிரதமரும் தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு இணக்கம்!

எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளதுதாக ஆங்கில ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேசிய அரசாங்கம் அமைவதன்   ஊடாக மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தொலைக்காட்சி பேட்டியொன்றில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார் என்பதும் இந்த புதிய அரசியல் கலாசாரம் இலங்கையின் மேம்பாட்டுக்கு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என ஜனாதிபதி நம்புகிறார். இரண்டு வருடங்களுக்கு எந்தவித இடரும் இன்றி அந்த    ... Read More »

வவுனியா சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன!

வவுனியா சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன, அங்கு இதுவரைகாலம் நடைமுறையில் இருந்து வந்த பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன, வடக்கில் இருந்து ஏற்றிவரப்படும் இரும்புகள் தொடர்பான பதிவுகள் மட்டுமே அங்கு பதியப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைள் நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளன என்று வன்னிப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் வடபகுதிக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . Read More »

அமெரிக்க,இலங்கை இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் இலங்கை வந்த நிஷா பிஸ்வால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோரை சந்தித்திருந்தார். இதனையடுத்து ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. ... Read More »

Scroll To Top