Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 834)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

யாழிலிருந்து துவிச்சக்கர வண்டியில் ஈழத்திலுள்ள சிவ தல யாத்திரை

அகில இலங்கை சிவ தல யாத்திரை 27-02-2014 அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. ஆர்.ராஜா ரட்ணசிங்கம் குணசேகர (வயது 65) தலமையில் சுழிபுரம் மத்தியச் சேர்ந்த வைத்திலிங்கம் கலைநாதன் (வயது 58) என்பவர் இப் பயணத்தில் ஈடுபடுகின்றனர். 2000 கிலோமீற்றரிலும் அதிகமான தூரம் பயணம் செய்து இலங்கை பூராகவுமுள்ள 30ற்கும் மேற்பட்ட சிவாலயங்களை தரிசிக்கவுள்ளனர். இவர்களது பயணம் சிவராத்திரி தினத்தன்று காலை 6.00 மணியளவில் சித்தங்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் (சித்தங்கேணி சிவன் கோவில்) ஆரம்பமாகியது. இப் பயணம் மார்ச் மாதம் 13ம் திகதி ... Read More »

அனலைதீவு வடலூர் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

அனலைதீவு வடலூர் அ.த.க. வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி – 2014 நிகழ்வுகள் யாவும் 25-02-2014 லன்று வித்தியாலய முதல்வர் தலமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் உள்ளுராட்சி மாகாண சபை உறுப்பினர் திரு. கஜதீபன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.   Read More »

கனடாவில் பெண்கள் மாநாடு

கனடாத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு (CTWDO) வழங்கும் அனைத்துலகப் பெண்கள் நாளும் மாநாடும். மார்ச் 1ம் திகதி, 2014 ல்ஸ்காபுரோவில் அமைந்துள்ள டெல்ரா ஹோடேலில் காலை 9.30 – மாலை 5.30 மணிவரை நடைபெறவுள்ளது. அனைத்து ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். The Canadian Tamil Women Development Organization would like to cordially invite you to An International Women’s Day Celebration & Conference held on March 1st, 2014. The conference aims to highlight, learn, educate and recognize the economic, political, and social achievements made by women globally as well ... Read More »

யாழ்ப்பாணத்துக்கு அதிவேக நெடுஞ்சாலை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளதாக www.colombopage.com என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ படி, 300 கிலோமீட்டர் நீண்ட நெடுஞ்சாலையில் நான்கு நிலைகளில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன. கொழும்பில் இருந்து தம்புல்லை வரையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டுஇ தம்புல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் A9 வீதியுடன் இணைக்கப்படும். இந்த அதிவேக பாதைகள் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளாக அமையவுள்ளன. இந்த அதிவேக பாதையையும் சீனாவின் உதவியினூடகவே செய்யப்படவுள்ளது. இதற்கு ... Read More »

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மைதானத்தில், அதிபர் வீ.கணேசராஜா தலைமையில் நடைபெற்ற வருடாந்த விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக மக்கள் வங்கிக் கிளையின் யாழ் பிராந்திய முகாமையாளர் கந்தசாமி சுசீந்திரன் தம்பதியினர் கலந்துகொண்டனர். காசிப்பிள்ளை இல்லம், நாகலிங்கம் இல்லம், பசுபதி இல்லம், சபாபதி இல்லம், செல்லத்துரை இல்லம் ஆகிய ஐந்து இல்லங்களில் இருந்தும் முறையே மண்ணிறம், மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு ஆகிய வர்ணங்களில் மாணவர்கள் போட்டிகளில் பங்குகொண்டனர். குறித்த விளையாட்டுப் போட்டியில் நாகலிங்கம் இல்லம் 473 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், சபாபதி இல்லம் 444 புள்ளிகளைப் ... Read More »

தீவக வீதிகள் புனரமைப்பு

யாழில் இருந்து பண்னைபாலம் ஊடாக தீவகம் செல்லும் வீதிகளின் அகலிப்பு பணிகள் ஆரம்பித்து புனரமைப்பு நடைபெறுகின்றது. அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்ற கடல் மார்க்க மாக வரும் மக்கள் யாழ் வருவதற்கும் யாழில் இருந்து அவர்கள் மீண்டும் அங்கு செல்வதற்கும் பிரதான வீதியாக இவ் வீதியே காணப்படுகின்றது. கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாவும் பிரயாணம் செய்யும் இந்த மக்களுக்கு அவ் வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்று முடிந்தால் போக்கு வரத்து இலவாக அமையுமென அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் மாத்திரமின்றி வேலனை, ... Read More »

யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 18-02-2014 பிற்பகல் 1-30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யாழ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கு பிரதம விருந்தினராக மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு ஓய்வுபெற்ற உதவி அதிபர் செல்வி.த.இராமலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விளையாட்டுத் தலைவர் திரு.ஜெ.மோகன் தலைமையில் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. பேர்வசிவல், புள்ளே, உவில்ஸ், றொமெய்ன், லிஞ்ச் என முறையே ஊதா, மஞ்சள், நீலம், மண்ணிறம், பச்சை ... Read More »

107 வருடங்கள் பழமை வாய்ந்த பஞ்சாரத்தி…

அனலைதீவு வடக்கு இராஜ இராஜேஸ்வரி மாரியம்மன் ஆலய பாவனையில் பழமையானதும் அதிசயமான ஓர் விடயம் யாதேனில் 107 வருடங்கள் பழமை வாய்ந்த பஞ்சாரத்தி தற்பொழுதும் பாவனையிலுள்ளமையாகும். ஏறத்தாழ 03 மப நிகர எடையுள்ள இப்பஞ்சாராத்தி மிகவும் திடகாத்திரமானதாக காட்சியளிக்கின்றமை மிகவும் சிறப்பான விடயமாகும்.  மேலும் ஒரு நூற்றாண்டு கால வாரலாற்றியல் ஆவணமாக இவ்வாலயத்தில் இதனை பேணிப்பாதுகாத்த பெருமை எமது ஆலய பரிபாலன சபை மற்றும் ஆலய குருவினையிரே சாரும். இவ்வாறு பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் பெருமை வரலாற்று சான்றியலாக இப்பஞ்சாராத்தி எமக்கு காட்டி நிற்கின்றது. Read More »

குருசடித்தீவில் புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா

யாழ்ப்பாணம் பண்ணை வீதி அமைந்துள்ள குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா இன்று நடைபெற்றது. 1947 ஆம் ஆண்டு அமைக்கபட்ட குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயம் கடந்த கால போரின்போது பாதிப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தற்பொழுது ஆலயம் புனரமைக்கப்பட்டு 22-02-2014 காலை 7.00 மணியளவில் யாழ் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. Read More »

யாழில் அரச அதிபர் 2013 வெற்றிக்கிண்ண சைக்கிள் ஓட்டப்போட்டி

யாழ் மாவட்ட செயலக நலன்புரி கழகத்தினால் அரச அதிபர் 2013 வெற்றிக்கிண்ண சைக்கிள் ஓட்டப்போட்டி 22-02-2014 நடைபெற்றது. இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள். காலை 8.00 மணிக்கு மாவட்ட செயலக நுழைவாயிலில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றன. யாழ் மாவட்ட செயலக சைக்கிள் ஓட்டப்போட்டியில் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் பாதையானது மாவட்ட செயலக நுழைவாயிலில் ஆரம்பித்து, கச்சேரி நல்லூர் வீதி வழியாகச் சென்று சங்கிலியன் பூங்காவால் இடதுபக்கம் ... Read More »

Scroll To Top