Monday , June 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம்

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம்? அசத்தும் விஞ்ஞானிகள்

நிலவில் உருளைக்கிழங்குகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட சீனா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்வது குறித்து சீனா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் சாங் கிங் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜி ஜெங்ஜின் இது குறித்து கூறுகையில், அடுத்த ஆண்டு சாங்ஜி 4 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பூமியில் நிலவுவது போன்ற சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்துக்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும். பூமியின் துணைக்கோளான நிலவின் மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப்படும் ... Read More »

வாஸ்ட் ஆப்பை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்

சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருந்து வந்த பேஸ்புக்கை, வாட்ஸ் ஆப் பின்னுக்கு தள்ளியுள்ளது. பேஸ்புக்கை விட வாட்ஸ்ப் ஆப்பில் தான் அதிகமாக செய்திகள் பகிரப்படுகின்றன என்று டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 5 கண்டங்களில், 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வெளியான டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் 15 சதவீதமும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் 8 சதவீதமும், ஸ்நாப்சாட், வைபர் மூலம் 2 சதவீதமும், வீசாட் மூலம் ... Read More »

இயந்திரவியல் பகுதிகள் இன்றி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரோபோ

ரோபோக்களை உருவாக்கும்போது பொதுவாக இலத்திரனியல் பகுதிகளும் இயந்திரவியல் பகுதிகளும் காணப்படும். ஆனாலும் முதன் முறையாக மோட்டார் உட்பட எந்தவொரு எந்திரவியல் பகுதிகளும் இன்றிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும் இந்த ரோபோ முற்றுமுழுதாக இலத்திரனியல் பாகங்களையே உள்ளடக்கியுள்ளது. DeployBot எனப்படும் இதனை கடல் படுக்கைகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பு என்பவற்றில் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவை தென் கொரியாவின் Seoul National பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கடலின் அடிப்பகுதி மற்றும் விண்வெளியில் இயந்திரவியல் சாதனங்களை பயன்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் ... Read More »

நோக்கியா அறிமுகம் செய்யும் மற்றுமொரு இலத்திரனியல் சாதனம்!

ஒரு காலத்தில் கைப்பேசி வடிவமைப்பில் கொடி கட்டி பறந்த நிறுவனமாக நோக்கியா இருந்தது. இடையில் தளம்பல்களை சந்தித்து தற்போது மீண்டும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதித்துள்ளது. இந்நிலையில் மற்றுமொரு இலத்திரனியல் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உடல் நலத்தைப் பேணக்கூடிய கேட்ஜட் ஒன்றினையே அறிமுகம் செய்யவுள்ளது. இதன் ஊடாக BMI மற்றும் குருதி அமுக்கம் என்பனவற்றினை அறிந்துகொள்ள முடியும். Wi-Fi வலையமைப்பின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். மேலும் இச் சாதனத்தின் ஊடாக பெறப்படும் அளவுகள் நம்பிக்கை ... Read More »

உங்கள் வெப் கமெரா உங்களையே வேவு பார்க்கும்… எச்சரிக்கை

வெப் கமெராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கமெராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப் கமெரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கமெராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் ... Read More »

DNA பிரதி செய்யப்படுவதை முதன் முறையாக பதிவு செய்த விஞ்ஞானிகள்!

 உயிரினங்களின் பரம்பரை ரீதியான இயல்புகளை தீர்மானிப்பதில் DNA முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த DNA இல் காணப்படும் மூலக்கூறுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும்போது பிரிதி செய்யப்படுவது வழக்கமாகும். இச் செயற்பாடு தொடர்பில் ஏற்கணவே விஞ்ஞான உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை தற்போது நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Stephen Kowalczykowski என்பவரது தலைமையிலான குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது. Guanine, Thymine, Cytosine, மற்றும் Adenine (G, T, C, A) எனப்படும் நான்கு வகையான ... Read More »

நேரடி ஒளிபரப்பு வசதியுடன் அறிமுகமாகும் 360 டிகிரி கமெரா!

சமூக வலைளத்தளங்கள் ஊடாக நேரடி ஒளிரப்பு செய்யக்கூடிய வசதியுடன் VRDL360 எனும் சிறிய ரக கமெரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக் கமெராவின் ஊடாக 7K அதி உயர் துல்லியம் கொண்ட புகைப்படங்களைம், 3K துல்லியம் வாய்ந்த வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இதனை லாஸ் ஏஞ்சலிலுள்ள VR Dongli எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் இதன் ஊடாக 360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும். 25,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் தற்போது இக் கமெராவானது Indiegogo ... Read More »

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இவ்விரு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சிறிய ஹெட்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. DiiFA எனும் நிறுவனம் இந்த ஹெட்போனை வடிவமைத்துள்ளது. இது ஈரலிப்பு மற்றும் நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் வளையக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் ப்ளூடூத், 6 மணி நேரத்திற்கு அதிகமாக செயற்படக்கூடிய மின்கலம் என்பனவும் இதில் காணப்படுகினறன. இதன் விலையானது 99 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

ஸ்மார்ட்போன்களில் ஆங்காங்கே இருக்கும் துளைகள்: எதற்காக உள்ளது தெரியுமா?

ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் கமெரா மற்றும் பிளாஷ் இடையே அல்லது முன்பக்கத்தின் நடுவில் சிறிய துளை இருக்கும் கவனித்துள்ளீர்களா? இந்த துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது? இந்த சிறிய துளையானது நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் சமயம் நமது ஐபோனில் அழைப்பு வரலாம். அப்போது போனை எடுத்து பேசினால் மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது சரியாக கேட்காது. ஆனால் போனில் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் இருப்பின் சிறப்பு ஓடியோ அமைப்பின் காரணமாக மறுபக்கம் நமது குரல் ... Read More »

வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்கும் நாள் தொலைவில் இல்லை: விஞ்ஞானிகள் ஆருடம்

இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த நிலையில் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை மனிதர்கள் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பூமியை போன்று பல கிரகங்கள் இருப்பது கண்டு ... Read More »

Scroll To Top