Wednesday , June 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 10)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க

இன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை. தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல மாறிவிட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்தினை சேர்ந்த மருத்துவர் சைமன் ஜோகாய், தற்போது செல்பி எடுப்பவர்கள் அதிகம். அடிக்கடி செல்பி எடுக்கும் போது போனில் உள்ள நீல நிற ஒளியானது தோலை பாதிக்கும் தன்மை உடையது. மொபைல் போனில் இருந்து வெளிவரும் எலக்ரோ மேக்னடிக் கதிர்கள் டி.என்.ஏ வை ... Read More »

உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் டாப் 5 விடயங்கள் என்ன தெரியுமா?

உண்மையில் நாம் வசிக்கும் இந்த பூமியை அழிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் எவையெல்லாம் பூமிக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அறிவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி 4,550,000,000 ஆண்டுகள் பழைய, 5,973,600,000,000,000,000,000 டன் எடை கொண்ட பூமிக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளனர்.   மாறி வரும் பருவநிலை பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்திருக்கிறது. அதற்கே துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் இதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் இன்னும் ... Read More »

நாசா நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள சவால்

விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் சாவல் ஒன்றினை விடுத்துள்ளது. தற்போது செவ்வாய் கிரகம் தொடர்பில் கடுமையான ஆராய்ச்சிகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வரும் அதேவேளை, அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் எத்தனித்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 2033ம் அளவில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்ளைக் குடியேற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு நாசாவிற்கு சவால் விடுத்துள்ளது. இதேவேளை 2030ம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பிலான திட்ட வரைவு ஒன்றினை நாசா நிறுவனம் இவ் வருடம் ... Read More »

ஞாபக சக்தியை அதிகரிக்க சூப்பர் வழி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சாதாரண மனிதர்களுக்கு ஞாபக சக்தி என்பது குறைவாகவே இருக்கம். உதாரணத்திற்கு இப்படியானவர்கள் தமது சாவியை எங்கே வைத்தது என்பது கூட ஞாபகமின்றி தேடுவார்கள். சொற்ப அளவிலானவர்கள் அபரிமிதமான ஞாபக சக்தியை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு செயற்பாடும் மிகவும் ஆழமாக பதிந்து ஞாபகத்தில் இருக்கும். இப்படியானவர்களைப் போன்ற ஞாபக சக்தியைப் பெறுவதற்கு சாதாரண ஞாபக சக்தி உடையவர்களால் முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒவ்வொரு செயற்பாடுகளையும் சுமார் 40 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும்போது ஞாபகசக்தி இரட்டிப்படைகின்றது என்பதை நிரூபித்துள்ளனர். இதற்காக 51 நபர்களுக்கு நாள்தோறும் ... Read More »

24 மணிநேரத்தில் வீடு கட்டலாம்! நம்பமுடியாத உண்மை

ரஷ்யாவில் அபிஸ் கோர்(Apis Cor) என்னும் நிறுவனம் தனது முப்பரிமான இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டி சாதனை படைத்துள்ளது. வீடு கட்டுவது என்பது சில காலம் எடுக்கும் விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எங்களுக்கு வீடுகட்ட ஒரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது. கொத்தனார், சித்தாள் போன்ற மனிதர்கள் இல்லாமல் அபிஸ் கோர் 3டி என்ற வீடு கட்டும் முப்பரிமாண இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஸ்டுபினோ ... Read More »

Pinterest தரும் புத்தம் புதிய வசதி

புகைப்படங்களை தரவேற்றம் செய்தல், பகிர்ந்து மகிழுதல் போன்ற சேவைகளைத் தருகின்ற முன்னணி இணையத்தளமாக Pinterest விளங்குகின்றது. புகைப்படங்கள் ஊடாகவே பல்வேறு ஐடியாக்களையும் பயனர்களுக்கு வழங்கிவரும் இவ் இணையத்தளம் பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது இவ் இணையத்தளமானது புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது Visual Search எனப்படும் புகைப்படங்களைக் கொண்டு தேடல்களை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்பமே அதுவாகும். இதற்காக இணைய உலாவிகளில் நிறுவக்கூடிய நீட்சி ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் Pinterest தளத்தினைப் பயன்படுத்தும்போது புகைப்படங்களை பயன்படுத்தி தேடலில் ... Read More »

பயமின்றி தகவல்களை பரிமாறலாம் – புதிய அப்ஸ்

இண்டர்நெட் பயன்பாடு உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தகவல் தொடர்பு முறை முற்றிலும் மாறி விட்டது. பெரும்பாலானோர் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது நல்லது தான் என்றாலும் இதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில் தொழில்நுட்பம் நம் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. தகவல் பரிமாற்றம் நமக்கான இரகசியமாக இருக்க வேண்டும் என்பதே பலரும் நோக்கமாக இருக்கும். இதை கருத்தில் கொண்ட அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள செயலி ... Read More »

குறைந்த உப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல்

ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் உணவில் 5 கிராம் அளவிற்கு குறைவாக உப்பை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. அன்றாட உணவில் 5 கிராம் அளவிற்கு கூடுதலாக உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார். ஏனெனில் நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் நமது உடலில் கலக்க வேண்டும். அதற்கு கீழ் குறைந்தால், மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் குறைந்து உயிரிழக்கும் அபாயம் ... Read More »

ஸ்மார்ட்போன்களில் வாழும் நுண்ணுயிர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வதாக விஞ்ஞான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் சம்மந்தமாக பல்வேறு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில், சமீபத்திய ஆய்வில் கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 10-12 வகையான கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் இருப்பதும், இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிருமிகளின் பாதிக்கப்பிலிருந்து ... Read More »

மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமது பல்வேறு பயன்களுக்காக பல மொபைல் ஆப்கள் உள்ளன. . ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் ஆப்ஸ்களும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியே, இந்த மொபைல் ஆப்ஸகள் மூலமாக நாம் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பதும், ஷொப்பிங் செய்வதும் அதிகரித்து வருகிறது. சில மொபைல் ஆப்ஷ்களின் மூலம் ஷொப்பிங் செய்கையில், நமது பெயர் உட்பட முகவரிகளை கொடுப்பதால், நமது தரவுகள் திருடப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே, மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சில விதிமுறைகளை கவனத்தில் ... Read More »

Scroll To Top