Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 2)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாசா. இன்று அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ்.  நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது. பெரும் முயற்சிகளுக்கும், ... Read More »

ஊடக அடிமைத்தனம்: நீங்கள் எந்த ரகம்?

சமூக ஊடகங்கள் என்றதுமே நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள், பார்த்து ரசிக்கும் வீடியோக்கள், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படிச் சமூக ஊடகங்களில் ஈடுபாடுகொண்டிருப்பது இந்தக் காலத்தில் இயல்பானதுதான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம். சமூக ஊடகச் செயல்பாடு அளவுக்கு மீறி அமையும்போது அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நேர விரயம், மன உளைச்சல் எனப் பாதிப்புகளுக்கு உள்ளாகலாம். எல்லாம் ... Read More »

விரைவில் : நோக்கியா அறிமுகப்படுத்தும் 4ஜி பீச்சர்போன்.!

விரைவில் ஜியோவிற்க்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் 4ஜி பீச்சர்போனை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் இப்போது ஜியோபோன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் தற்போது நோக்கியா பிரான்டிங் கொண்ட 4ஜி மொபைல் போன் ஒன்றை அந்நிறுவனம் தயாரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More »

சந்திரனே பூமியை அழித்துவிடும்: அதிர்ச்சி தகவல்

சந்திரன் ஆண்டுதோறும் தோராயமாக 4 செ.மீற்றர் அளவில் பூமியை விட்டு நகர்ந்து செல்கிறது. ஆனால் இந்த நகர்தலின் முடிவில் பூமியை நோக்கி ஒரு கடுமையான பாய்ச்சலை சந்திரன் நிகழ்த்த கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியின் கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான சந்திரனின் ஈர்ப்பு விசையால் சந்திரன் பூமியை நோக்கி வரும். இதன் முடிவில் சந்திரன் பூமிக்கு இடையே மோதல் நிகழும் என விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர். இந்த பூமி, சந்திரன் மோதல் நிகழ 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் ஆனால், அப்போது ... Read More »

1 மணி நேரத்தில் உலகத்தை சுற்றலாம்

உலகிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை வடிவமைத்து விற்பனையிலும் சாதனைப் படைத்த SpaceX நிறுவனத்தின் தலைவர் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு மணி நேரத்தில் உலகத்தை சுற்றும் பயணிகள் வாகனத்தை உருவாக்கவுள்ளார். செவ்வாய் கிரகத்துக்கும் நிலாவுக்கும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிக்பக்கெட் ராக்கெட் மாதிரியைக் கொண்டு இந்த புதிய வாகனத்தை தயாரிக்க இருப்பதாகவும் இதன் மூலம் பன்னாட்டு நகரங்களுக்கு பயணிக்க முடியும்.  செவ்வாய் கிரகத்தை நோக்கி வேகமாக செல்லும் ராக்கெட்டை உருவாக்க முடிகிற நம்மால், பூமியில் வேகமாக பயணிப்பதற்கான வாகனத்தை ஏன் ... Read More »

டுபாயில் உருவாகும் செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ பயிற்சி அளிக்கும் வகையில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள டுபாயில் மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐக்கிய அமீரகம் களமிறங்கியுள்ளது. இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது. அதற்காக 1.9 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. இது டுபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. அதற்காக 100 மில்லியன் பவுண்ட் ... Read More »

கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்?

எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் பன்னிரெண்டு வருடங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள். வாகனத்தின் இன்ஜினுக்கு அருகே உள்ள உலோக பாகங்களுக்கு பதிலாக, அதிக வெப்பத்தைத் தாங்கும் பிளாஸ்டிக்கால் ஆன பாகங்களை உருவாக்ககும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. கார்களின் எடையை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அத்துறையின் முக்கிய கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. “அதிக மாசுபாட்டை உருவாக்கும் ... Read More »

அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் GIONEE M7

Gionee நிறுவனமானது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் ஏனைய கைப்பேசிகளுக்கு சவால் விடும் வகையில் அட்டகாசமான சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. Gionee M7 எனும் குறித்த கைப்பேசியானது 6.1 அங்குல அளவுடையதும் 2160 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ திரையினைக் கொண்டுள்ளது. அதேபோன்று Mediatek Helio P30 சிப் செட், பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு ... Read More »

வீறுநடைபோடும் இன்ஸ்டாகிராம்

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் புதிய சாதனையை எட்டியுள்ளது. அதாவது மாதாந்த செயற்படு நிலையில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையானது 800 மில்லியனை தாண்டியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் மட்டும் சுமார் 100 மில்லியன் செயற்படு நிலையில் உள்ள பயனர்களை புதிதாக பெற்றுள்ளது. அடுத்துவரும் சில மாதங்களின் இந்த எண்ணிக்கையானது ஒரு பில்லியனை எட்டிவிடும் என நம்பப்படுகின்றது. இதேவேளை ஸ்னாப் சட் ஆனது 173 மில்லியன் நாளாந்த செயற்படு நிலையில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. அதேபோன்று ... Read More »

இலங்கையரினால் கண்டுபிடிக்கப்பட்ட மகத்தான இயந்திரம்

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் போது பயன்படுத்துவதற்காக இயந்திரமொன்றை, இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போது பயன்படுத்தக் கூடிய வகையில் விசேட பெட்டரி பை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பொறியியலாளர் பசிந்து பல்லாவெல என்பவரினால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் பிரித்தானியாவிலுள்ள Power Migration Partners Ltd நிறுவனத்தின் இயக்குனராவார். கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளது. இதன்போது வெள்ள நிலைமையினால் அதிகளவான இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் வெள்ளம் ஏற்படும் போது பாதுகாப்பு நடவடிக்கையினை ... Read More »

Scroll To Top