Wednesday , June 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 20)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

உலகின் மிக உயரமான மரத்தினை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: உயரம் எவ்வளவு தெரியுமா?

இயற்கையின் படைப்பில் உலக நாடுகள் எங்கும் பல்வேறு வகையான மர இனங்கள் காணப்படுகின்றன. இம் மர இனங்கள் ஒவ்வொன்றும் விசேட சிறப்பியல்புகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. தற்போது விஞ்ஞானிகள் உலகிலே மிகவும் உயரமான வெப்ப மண்டல மரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இம் மரமானது தென் கிழக்கு ஆசியாவில் உள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய தீவான Borneo இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 94.1 மீற்றர்கள் (309 அடி) என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மிகவும் உயரமான இவ்வாறான 49 மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் ஆகக் கூடிய ... Read More »

வாட்ஸ் அப் மெசேஜை மாத்தி அனுப்பிட்டீங்களா? இதோ சூப்பர் ஐடியா

சமூகவலைதளங்களில் வாட்ஸ் அப்பானது தற்போது உலகளவில் முன்னணி வகிக்கிறது. இதில் நாம் தவறுதலாக சில விடயங்களை செய்ய வாய்ப்புண்டு. அதாவது ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மாற்றி வேறொருவருக்கும் தெரியாமல் அனுப்புவது போன்ற தவறுகளை செய்தால் அதை உடனே எப்படி சரி செய்வது? நாம் ஒரு மெசேஜை யாருக்கோ தவறுதலாக மாற்றி அனுப்பினால், அது செண்ட் ஆவதற்குள் உடனே நம் கைபேசியின் டேட்டா அல்லது வைஃபை ஆப் செய்தால் அந்த மெசேஜ் செண்ட் ஆகாது. இதை நாம் மிக வேகமாக செய்தால் தான் வாட்ஸ்ஆப் ... Read More »

நீங்கள் இறந்த பின் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் என்ன ஆகும்?

தற்போது உள்ள காலக்கட்டத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் தான். குறிப்பாக பிரபலமாக உள்ள பேஸ்புக்கில் தான் பலரும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நட்பு, குடும்பம் என பல முக்கியமானவர்களின் தொடர்பும் இதன் வழியே மட்டுமே அதிகமாக அமைகிறது. இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் அப்படியே இருக்க தான் செய்யும். ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப நபர்கள் பயன்படுத்தும் ... Read More »

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்

அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ... Read More »

பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

அப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும் வசதியினை அப் ஸ்டோரின் ஊடாக வழங்கி வருகின்றது. இத்தளத்தில் அப்பிள் நிறுவனத்தின் அப்பிளிக்கேஷன்கள் மட்டுமன்றி மூன்றாம் தரப்பின் அப்பிளிக்கேஷன்களும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு தரவேற்றம் செய்யப்பட்டுள்ள சொப்பிங் தொடர்பான அப்பிளிக்கேஷன்களுள் அனேகமானவை போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பிள் நிறுவனம் நூற்றுக்கணக்கான போலி அப்பிளிக்கேஷன்களை கண்டுபிடித்து நீக்கியுள்ளது. அமெரிக்காவின் செய்தி நிறுவனங்களான நியூயோர்க் டைம்ஸ் மற்றும் நியூயோர்க் போஸ்ட் என்பவற்றில் போலி அப்பிளிக்கேஷன்கள் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே ... Read More »

சாம்சங் கேலக்ஸி J5 போனும் வெடிக்கிறது! ஓர் எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணின் சாம்சங் போன் வெடித்ததால் சாம்சங் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மை காலமாக சாம்சாங் நிறுவனத்தை சேர்ந்த கேலக்ஸி நோட் 7 வெடித்து வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக வாடிக்கையாளர்களிடம் போன்கள் அனைத்தையும் சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சாம்சங் கேலக்சி J5 வெடித்து விட்டதாக புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த வாரம் தன்னுடைய நான்கு வயது குழந்தை போனை பயன்படுத்திக் ... Read More »

சாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன

ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக ... Read More »

கடலுக்கடியில் பீப் சத்தம்! அதிர்ச்சியில் மக்கள்

ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வரும் பீப் சத்தத்தை கனடா இராணுவம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவின் நுனாவட் மக்கள், கடலுக்கடியில் ஹம் அல்லது பீப் சத்தம் வருவதாக அரசுக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கனடா இராணுவத்தினர் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். மர்மமாக ஒலிக்கும் அந்த சத்தத்தால் விலங்குகள் பயந்திருக்ககூடும் என கருதப்படுகிறது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் Paul Quassa கூறுகையில், கோடை மற்றும் குளிர்காலங்களில் அதிகளவு வேட்டையாடப்படும் பகுதிகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இது சுரங்கம் தோண்டுவதால் ஏற்படுவதா அல்லது ... Read More »

வாட்ஸ் அப்பில் மேலும் ஒரு புதிய வசதி அறிமுகம்

வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. புது புது அப்டேட்களை வாட்ஸ் அப்பில் இந்த நிறுவனம் அடிக்கடி செயல்படுத்தி வருகிறது. Read More »

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்று வெளியேறியுள்ளது. இது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு பெருமளவில் அழுத்தப்பட்டுள்ளது. புவிகாந்த புயல் அதன்பின் கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் ... Read More »

Scroll To Top