Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 3)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

இந்த 4 ஆப் இருந்தால் டெங்கு, சிக்கன்குனியா நெருங்காது

மழைக்காலம் வந்தாலே டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சலும் தானாகவே வந்துவிடும். சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்தல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், காய்ச்சல் மற்றவர்களிடமிருந்து பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தான் கொசு ஒழித்தல் முதல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது வரையான சேவைகளை இந்த 4 ஆப்கள் மூலம் பெற்றுவிடலாம். அர்பன் க்ளாப் (UrbanClap) கொசுக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களை அழிப்பதற்கு தேவையான, தரம் வாய்ந்த வேதி மருந்துகள் என்னென்ன என்பது ... Read More »

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் சூரிய கிரகணம்: நாசா முக்கிய அறிவுரை

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கவுள்ள நிலையில் நாசா முக்கிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயராகும். இந்த நிலையில் ஆகஸ்ட் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும், அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. மேலும் இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்கென பிரத்யேகமாக ... Read More »

விண்வெளி நோக்கியும் விஸ்வரூபம் எடுக்கும் Google Map Street View!

உலகின் பல பகுதிகளையும் படம் பிடித்து அங்குள்ள வீதிகளில் இலகுவாக பயணம் செய்யக்கூடிய வசதியை Google Map Street View தருகின்றது. இதனைத் தொடர்ந்து விண்வெளியிலும் காலடி பதிப்பதற்கான முயற்சிகளில் கூகுள் மேப் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்தினை கூகுள் மேப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 360 டிகிரியிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமானது முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ... Read More »

இப்படியும் நடக்குமா? தற்கொலை செய்துகொண்ட ரோபோ!!

வேலைச்சுமை காரணமாக மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ரோபோ ஒன்று வேலைச்சுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளது. கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நைட்ஸ்கோப் K5 (Knighscope K5) என்ற ரோபோவை தயாரித்தது. இந்த ரோபோ வாஷிங்கடன் நகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் செக்யூரிட்யாக இருந்து வந்தது. இதன் வேலை, பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள், வாகன் ஓட்டிகள் ஆகியவற்றை கண்கானிப்பதாகும். 136 கிலோ எடை, 5 அடி உயரம் உள்ள இந்த ரோபோ மணிக்கு 3 ... Read More »

அதிரடி வசதியை தரக் காத்திருக்கும் வாட்ஸ் ஆப்!

வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது. அண்மையில் மேலும் பல கோப்பு வகைகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியினை வழங்கியிருந்தமை தெரிந்ததே. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை குறித்த ஆப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அதாவது இதுவரை காலமும் யூடியூப் வீடியோக்களின் இணைப்புக்களை பரிமாறிக்கொள்ளக்கூடியதாக இருந்த போதிலும் அவ்வீடியோக்களை அப்பிளிக்கேஷன்களுக்கு வெளியே யூடியூப் அப்ளிக்கேஷனில் பார்க்க முடியும். ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ் ஆப் ... Read More »

கூகுள் பறக்கவிடும் 20 மில்லியன் கொசுக்கள்

இன்டர்நெட் உலகில்தான் கூகுள் ஏதாவது வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது என்றால், அறிவியல் தளத்திலும் பல விநோத முயற்சிகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet), தனது உயிர் அறிவியல் துறையான வெரிலி (Verily Life Science) உதவியுடன் 20 மில்லியன் கொசுக்களை கலிஃபோர்னியாவிலிருந்து பறக்கவிடப்போகிறது. சிட்டி ரோபோ போல் ரங்கூஸ்கி கொசுவைக் கண்டுபிடிக்கும் முயற்சியோ என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒட்டுமொத்த கொசு இனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி! கொசுவின் இனப்பெருக்கம் குறையும் கொசுவின் ... Read More »

நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியாகும் வினோத சமிக்ஞை கண்டுபிடிப்பு

அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு சமிக்ஞைகள் வெளியாவது பூமியில் உள்ள வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் தற்போது பூமியிலிருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியேறும் வினோத சமிக்ஞை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. Arecibo Observatory எனும் ரேடியோ தொலைகாட்டியின் ஊடாகவே இந்த சமிக்ஞை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியோ சமிக்ஞையானது Ross 128 எனும் நட்சத்திரத்திலிருந்தே வெளிவருவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர். Puerto Rico பல்கலைக்கழக வானியலாளர்களே இதனை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவதானித்துள்ளனர். இதேவேளை ... Read More »

மைக்ரோசாப்ட் திடீர் அறிவிப்பு..விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதே சமயம் அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், விரைவில் புதிய அதிரடி திட்டங்களோடு திரும்ப வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகில் விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தை ஓ.எஸ் உபயோகிப்பவர்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது. Read More »

ஒலி எழுப்பாத டர்பைன்கள் மற்றும் விமானங்களை வடிவமைக்க உதவும் ஆந்தைகள்

இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரினங்களினதும் செயற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இந்த இயற்கையின் விந்தைகளைப் பார்த்தே பல்வேறு செயற்கை புரட்சிகளை மனிதன் ஏற்படுத்தினான். இவற்றுள் பறவைகளை மாதிரியாகக் கொண்டு விமானங்கள் உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பறவைகளுள் ஆந்தைகள் சற்று வித்தியாசமான இயல்பினைக் கொண்டதாக இருக்கின்றன. அதாவது இவை பறக்கும் போது இறக்கைகள் ஒலி எழுப்புவதில்லை. எனவே இந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டு டர்பைன்கள் மற்றும் ஆகாய விமானம் என்பவற்றினை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். ஜப்பானிலுள்ள Chiba பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த குழுவே இது தொடர்பாக ஆராய்ந்து ... Read More »

மனித தலை முடியினை இப்படியும் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

தலை முடியானது பொதுவாக வெயிலில் இருந்து பாதுகாக்கவும், அழகை தருவதற்காகவும் மட்டுமே இருப்பதாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டில் வேறு சில பயன்பாடுகளையும் தரக்கூடியதாக இருக்கின்றது. இதில் மற்றொரு பயனாக எண்ணெக் கசிவுகளை நீக்க பயன்படுத்த முடியும் என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழுக்கூடிய எண்ணெய்க் கசிவுகளை அகற்றுவதற்கு செயற்கை பொருட்களே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவுஸ்திரேலியாவின் University of Technology Sydney (UTS) ஐ சேர்ந்த Rebecca Pagnucco மேற்கொண்ட ஆய்வில் இயற்கையான தலை முடியினையும் பயன்படுத்த முடியும் ... Read More »

Scroll To Top