Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 30)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

வாட்ஸ் அப்பில் மேலும் ஒரு புதிய வசதி அறிமுகம்

வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. புது புது அப்டேட்களை வாட்ஸ் அப்பில் இந்த நிறுவனம் அடிக்கடி செயல்படுத்தி வருகிறது. Read More »

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்று வெளியேறியுள்ளது. இது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு பெருமளவில் அழுத்தப்பட்டுள்ளது. புவிகாந்த புயல் அதன்பின் கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் ... Read More »

செவ்வாய் கிரகத்தில் கரடி உள்ளதா? வெளியான பரபரப்பு புகைப்படங்கள்

செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கரடி போன்ற ஒரு உருவம் கொண்ட பொருள் தெரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அந்த வகையில் நாசா தற்போது கரடி போன்ற ஒரு உருவம் கொண்ட சிலை போன்ற ஒரு பொருளை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பற்றி பல்வேறு நபர்கள் பல்வேறு தனமான ... Read More »

பூமியை தாக்க வரும் வேற்றுகிரகவாசிகளின் அபாய மணி சத்தம்

பயி்ர் வட்டங்கள் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். மனிதனை ஆச்சிரியத்திற்க்கு உள்ளாக்கும் ஆயிரமாயிரம் பயிர்வட்டங்கள் காணப்படத்தான் செய்கின்றன. பெருபான்மையானோர் இதனை உருவாக்குபவர்கள் வேற்றறுகிரகவாசிகள் என ஆணித்தரமாக அடித்து கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறான மிகப்பெரிய அளவிலான வட்டங்களை மனிதர்களால் உருவாக்கமுடியாது தான். ஆனால் நாம் இன்று பார்க்கபோகும் விடயம் உண்மையில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தவள்ளது. கடந்த 2002ல் ஆகஸ்ட் 15ம் திகதி இங்கிலாந்தில் உள்ள Sparsholt – Hampshire என்ற இடத்தில் ஒர் பிரம்மாண்ட பயிர்வட்டம் உருவானது. ஆனால் இந்த பயிர் வட்டம் சற்று ... Read More »

மின்னஞ்சல் மோசடி: ரூ.14 கோடியை மொத்தமாக இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மின்னஞ்சல் மோசடிக்கு இரையான வளரும் தொழிலதிபர் ஒருவர் 14 கோடி ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பூனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்துடன் சில எந்திரங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்த சில நாட்களில் இவருக்கு மிகவும் அவசரம் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட குறித்த பொருட்களுக்கான ரசீதும் வங்கி கணக்கும் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு ... Read More »

உயிரிழந்தவர்களின் சடலங்களை விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு: ஏன் தெரியுமா?

நாம் வாழும் இப்பூமியில் மரணமடையும் சிலரது சடலங்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மற்றொரு கிரகத்தில் புதிய ஏலியன்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வது போல் மற்ற கிரகங்களிலும் ஏலியன்ஸ் எனப்படும் உயிரினங்கள் வசித்து வருவதாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது. ஆனால், இதனை ஆதாரத்துடன் நமது ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் தேடுவதை விட நாமே புதிதாக ஏலியன்ஸ்களை உருவாக்க முடியும் என்ற முயற்சியை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு ... Read More »

காத்திருக்கும் பேராபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மனித செயற்பாடுகள் காரணமாக பூகோளத்தின் வெப்பநிலையானது வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதனால் பெரும்பாலான உலக நாடுகள் கடும் திண்டாட்டங்களை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளன. இப்படியிருக்கையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 195 நாடுகள் இணைந்து பாரிஸ் உன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இவ் உடன்படிக்கையின் பிரகாரம் தமது நாடுகளின் வெப்பநிலையை தற்போது உள்ள வெப்ப நிலையை விடவும் 2 டிகிரி செல்சிஸை தாண்டி அதிரிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். எனினும் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தொடர்பில் சந்தேககங்களே நிலவுகின்றன. இதற்கு காரணம் மனிதர்களின் பொறுப்பற்ற செயல்பாடு தொடர்வதாகும். ... Read More »

பல நகரங்கள் அழியும்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு

அறிவியல் ஆய்வின் மூலம் மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதன்மூலம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உருகும் பனிப்பாறைகள் குறித்து, பனிக்கட்டியை ஊடுருவிச் செல்லும் ராடார் மற்றும் லேசர் கதிர்கள் ஆகியவற்றின் மூலம் இருவேறு சோதனைகள் செய்யப்பட்டது. இந்த இருவேறுபட்ட சோதனையின் போது, ஒரே மாதிரியான முடிவுகள் வந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நாசாவின் ஆய்வாளர் அலெக்செண்டர் கூறியுள்ளார். ... Read More »

கூகுளின் Android Pay வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்

கூகுள் நிறுவனமானது தனது தயாரிப்புக்களை பயனர்கள் ஒன்லைன் ஊடாக இலகுவாக கொள்வனவு செய்வதற்காக Android Pay எனும் சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே. தற்போது குறிப்பிட்ட அளவிலான நாடுகளில் மட்டுமே பயன்பாடட்டில் காணப்படும் இச் சேவையானது ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இச் சேவையின் ஊடாக தனது பயனர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதத்தை வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் Visa மற்றும் Mastercard என்பவற்றினைப் பயன்படுத்தி Android Pay சேவையில் பணத்தினை செலுத்த முடியும். இதேவேளை தற்போது Visa ... Read More »

வருகிறது தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ‛வாஹனா’

சர்வதேச அளவில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த குட்டி விமானத்திற்கு ‛வாஹனா’ என்று ஏர்பஸ் பெயரிட்டுள்ளது. குட்டி விமானம் என்று குறிப்பிட்டாலும், வாஹனா, கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்டர் போல வடிமைப்பிலும், இயக்கத்திலும் காணப்படுகிறது. முதற்கட்ட வடிவமைப்பில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் தயாராகி வரும் வாஹனா எதிர்காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் ... Read More »

Scroll To Top