Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 4)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

தாமாகவே ஒளியைப் பிறப்பிக்கும் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

சமுத்திரங்களின் மிகவும் ஆழமான பகுதிகளில் சூரிய ஒளி கிடைப்பது மிக மிக அரிதாகவே இருக்கும். இதனால் அப் பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகவே இருக்கும். ஆனால் சில வகையான பவளப்பாறைகள் சூரிய ஒளிக்கு பதிலாக தாமே ஒளியைப் பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஆழமான பகுதிகளில் அல்காக்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட உதவியாகவும் இருக்கின்றன. சவுத்தாம்ரன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன. சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீற்றர்கள் ஆழத்திற்கே ... Read More »

10 விநாடிகளில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும் டூத்பிரஷ்

10 விநாடிகளில் பற்களை சுத்தம் செய்யும் தானியங்கி டூத் பிரஷ் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ளது. Amabrush என பெயரிடப்பட்டுள்ள இந்த டூத் பிரஷ் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. டூத்பேஷ்ட்டை உங்கள் பிரஷ்ஷில் வைத்து உங்கள் பற்களில் வைத்து அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால், இந்த பிரஷ் தானாகவே பற்களை சுத்தம் செய்துவிடும். உங்கள் பற்களில் ஒட்டியுள்ள பாக்டீரியாக்களை 99.9 சதவீதம் சுத்தமாக்கிவிடும். இந்த டூத் பிரஷ்ஷானது அனைத்து விதமான பற்களின் அளவுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More »

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள் இவை தான்..!

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே. மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் ... Read More »

குழந்தை எப்படி வேண்டும்? பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்

அடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி. இவர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தம்பதிகள் தங்கள் டிஎன்ஏ-வை வைத்து ஆய்வகங்களில் கருவை ... Read More »

200 கோடி வாடிக்கையாளர்கள்: புதிய அம்சங்களை வழங்கும் பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் சமீபத்திய அறிவிப்பில் ஒவ்வொரு மாதமும் சுமார் 200 கோடி பேர் பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பேஸ்புக் வாசிகள் அனைவருக்கும் பேஸ்புக் போஸ்ட் மூலம் தனது நன்றியை தெரிவித்தார் 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பேஸ்புக் மிகப்பெரிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலம் மக்கள் தகவல் பரிமாற்றம் செய்ய பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆன்லைனில் அதிகளவு சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் இத்தகைய பாதிப்பை பேஸ்புக் மட்டுமே ... Read More »

புதிய வகை உயிரினம்: 9 வயது தமிழக சிறுவன் சாதனை

தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த வருடம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஏரியில் தண்ணீரின் பத்து அடிக்கு கீழே ஜெல்லி பிஷ் இருப்பதை கண்டுள்ளார். இதை அவரது தந்தை கிஷோர் பிச்சைமுத்து அறிய வகை மீன் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் அந்த மீனை தங்களுடன் கொண்டு ... Read More »

வெப்பநிலை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கக்கூடிய பசுக்கள் விரைவில்

தற்போது உலகளாவிய ரீதியில் வெப்பநிலையானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை தெரிந்ததே. இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் இறப்புக்கு முகம் கொடுக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கி வருகின்றன. இந்நிலையில் வெப்ப சூழலை தாங்கக்கூடிய பசுக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முன்மொழிவை University of Florida Institute of Food and Agricultural Sciences முன்வைத்துள்ளது. இது மூன்று வருட திட்டத்தினைக் கொண்டிருப்பதுடன் இதற்காக 733,000 அமெரிக்க டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் ஊடாக பசுக்கள் அனைத்தும் மரபுரிமை மாற்றத்தின் ... Read More »

2020க்குள் குளோனிங் மனிதன்: அசத்த போகும் விஞ்ஞானிகள்

கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) என்பது தான் குளோனிங் முறையின் அடிப்படை விடயமாகும். உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செம்மறி ஆடு, பூனை, மான், நாய் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மிருகங்களை விஞ்ஞானிகள் இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள். குளோனிங், ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்சைமுறை குளோனிங் (Therapeutic Cloning) ஆகிய மூன்று வகைகளில் செய்யப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக குளோனிங் செய்யப்பட வேண்டிய மிருகத்திலிருந்து முதிர்ந்த சீமாடிக் உயிரணு (Matured Somatic Cell) ... Read More »

மரணத்தை தள்ளிப் போடும் மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அசத்தல்

மரண விளிம்பில் உள்ளவர்களை பிழைக்க வைத்து, அவர்களை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணி நேரம் பேச வைக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களின் காரணமாக மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது. மரணத்தை வெல்லும் மருந்து கண்டுபிடிக்கப்படாதா என்ற ஏக்கமும், கேள்வியும் பலரிடம் உள்ளது. இது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளும் பல காலமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சோல்பிடிம் என பெயர் கொண்ட மருந்தானது, மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து ... Read More »

புதிய வசதிகள், புதிய வடிவம் என கலக்கும் ஸ்கைப்பின் புதிய அப்பிளிக்கேஷன்

இணையவழி தொடர்பாடலில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற சேவையாக திகழ்கின்றது. இதனை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன. தற்போது iOS சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பானது முற்றிலும் புதிய தோற்றத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி சில புதிய வசதிகளையும் கொண்டுள்ளது. அதில் ஒன்று In-Call Reactions வசதியாகும். இதன் ஊடாக அழைப்பில் இருக்கும்போதே லைவ் ஈமோஜிக்கள், லைவ் டெக்ஸ்ட், ரியல் டைம் போட்டோஸ் என்பவற்றினை பயன்படுத்த முடியும். மற்றைய ... Read More »

Scroll To Top