Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 47)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் அனுபவத்தை தரும் புதிய 360 டிகிரி வீடியோவை வெளியிட்டது நாசா

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் முழு மூச்சில் செயற்பட்டுவரும் நாசா விண்வெளி ஆய்வு மையம் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் மூலம் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது, செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு அங்கிருப்பது போன்ற அனுபவத்தினை வழங்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த வீடியோவின் மூலம் பூரண அனுபவத்தினை பெறுவதற்கு Chrome, Opera, Firefox, அல்லது Internet Explorer இணைய உலாவிகளில் இந்த வீடியோவை கண்டுகளிக்க வேண்டியிருப்பதுடன், HD தரத்தில் பார்வையிட ... Read More »

பயனர்களுக்காக Snapchat தரும் புத்தம் புதிய வசதி

நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடன் சட்டிங் செய்து மகிழும் வசதியை தரும் Snapchat ஆனது விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது நண்பவர்கள் அல்லது குடும்பத்தவர்களுடன் சட்டிங் செய்துகொண்டிருக்கும் தருணத்திலேயே ஒன்லைன் சொப்பிங் செய்யக்கூடிய வசதியே அதுவாகும். மின்னியல் வணிகத்தினை அடிப்படையாகக் கொண்டு மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதியின் ஊடாக பயனர்களுக்கு இலகுவானதும், பரந்த சேவையினை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதுடன், இவ்வாறான சட்டிங் சேவையை வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முன்னேற முடியும் எனவும் அந் ... Read More »

Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி எப்படியிருக்கும்?

Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் Samsung Galaxy S7 கைப்பேசியில், Micro SD card பொருத்தப்பட்டு வெளியாகவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், 5.1 இன்ச் Display மற்றும் 2560 x 1440 Pixel தீர்மானம் கொண்டுள்ளது. 4GB RAM மற்றும் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 12 மெகாபிக்சல் கொண்ட BRITECELL கமெரா வசதி பொருத்தப்பட்டுள்ளது. 3000 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இவற்றில் Qualcomm ... Read More »

மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது iPhone 5SE

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5Se மொடலை மார்ச் 18 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளது. அப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்பிற்கு ஐபோன் 5Se (Special edition) என்று பெயரிட்டுள்ளது. 4 இன்ச் தொடுதிரை வசதியுடம் தயாரிக்கப்பட்டுள்ள இது, ஐபோன் 6 போன்று வட்ட வடிவ முனைகளை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முந்தைய ஐபோன் 5 மொடலின் வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இதில் 6 மற்றும் 6s மொடல்களின் சில அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 8 MP முன்புற கமெரா 1.2 ... Read More »

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத குறுந்தகட்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

சுமார் 360 டெரா பைட் வரை சேமிக்கும் வசதி கொண்ட அழியா குறுந்தகடை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.் நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே உள்ளது. எனினும், இதில் 360 டெராபைட் (1 டெரா பைட் என்பது 100 ஜிகா பைட்) அளவிலான மின்னணுத் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ... Read More »

மின்னல் வேக தரவு கடத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

அசுர வளர்ச்சி கண்டுவரும் தொழில்நுட்ப உலகில் தரவுப் பரிமாற்றம் என்பது இன்றியமையாததாக விளங்குகின்றது. அதிலும் இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தரவுப் பரிமாற்ற வேகமானது புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக காலத்திற்கு காலம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒளியியல் தொழில்நுட்பத்தின் (Optical Communication System) ஊடாக செக்கனுக்கு 1.125 ரெறா பைட்ஸ் வேகத்தில் தரவு கடத்தும் முறையினை கண்டுபிடித்து ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இவ் வேகமானது ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பல்வேறு தரவு பரிமாற்ற வேகத்தினதும் சராசரியின் 50,000 ... Read More »

13 மெகாபிக்சல் கமெரா வசதி கொண்ட Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசி

லெனோவா நிறுவனம் Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் சிம் ஆதரவு கொண்ட Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசி ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. 401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் Display இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்கைப்பேசியில் Adreno 405 ஜிபியூ மற்றும் 3ஜிபி RAM உடன் இணைந்து 1.5GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக ... Read More »

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் “MyShake” Application

அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிலநடுக்கத்தை கண்டறியும் அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளனர். “MyShake” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பிளிகேஷன், நிலநடுக்கத்தினை crowdsourcing phones மூலம் முன்கூட்டியே கணித்துவிடுகிறது. அதாவது, ஒரு இடத்தில் நிலநடுக்கம் நிகழப்போகிறது என்றால், அந்த இடம் மற்றும் நேரம் அதுமட்டுமின்றி அதன் அதிர்வீச்சு போன்றவற்றை துல்லியமாக ஸ்கேன் செய்து உடனடியாக அது சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கிறது. 60 சதவீதம் வரையிலான ஆண்ராய்டு ஸ்மார்ட்கைப்பேசிகள் சுமார் 6 மைல்(, (10 கிலோ மீற்றர்) வரையிலான தூரத்தில் நிகழும் ... Read More »

இரட்டை Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகும் HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி

HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி இரட்டை Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கிறது. HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசியல் உள்ள சிறப்பம்சங்க குறித்து ஏராளமான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையிலும், தற்போது வரை அந்த கைப்பேசி சந்தைக்கு வரவில்லை. இந்நிலையில், இக்கைப்பேசி குறித்து புதிய தகவலாக, Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கின்றது, இதன் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் வசதி கொண்டது. மேலும், 5,1 இன்ச் தொடுதிரை மற்றும் Quad HD தீர்மான கொண்ட இக்கைப்பேசி, 560 x 1440 pixels கொண்டது. மேலும், Snapdragon 820 ... Read More »

கூகுள் தரும் மற்றுமொரு இலவச சேமிப்பு வசதி

Safer Internet Day 2016 இனை கொண்டாடும் முகமாக கூகுள் நிறுவனம் 2GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது. இம் மேலதிக சேமிப்பு வசதியானது கூகுள் ட்ரைவினூடாகவே வழங்கப்படுவதுடன் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதினை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைப் பேறுவதற்கு கூகுள் கணக்கினுள் உள்நுழைந்து பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக இரண்டு நிலை சரிபார்ப்பு, கோப்புக்களை மீட்டெடுத்தல், ஏனைய சாதனங்களுடன் இணைத்தல் போன்ற செயற்பாடுகளின் போதான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும். Read More »

Scroll To Top