Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் (page 54)

பதிவு வகை: தொழில்நுட்பம்

Feed Subscription

தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் சோலார் பேனல் வீதிகள்

சம காலத்தில் மின் உற்பத்தியில் சோலார் பேனல் மூலமான மின் உற்பத்திக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக சோலார் பேனலினால் வீதிகள் வடிவமைக்கும் முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், முதற் கட்டமாக 1000 கிலோமீற்றர்கள் நீளமான வீதியை அடுத்துவரும் 5 வருடங்களுக்குள் நிர்மாணித்து முடிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டு சனத்தொகையின் 8 சதவீதமானவர்களின் (5 மில்லியன் மக்கள்) மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எண்ணியுள்ளது. இத்திட்டத்தினை பிரான்ஸ் ... Read More »

உங்கள் தேடுதலை எளிமையாக்கும் கூகுள் INBOX Apps

கூகுள் நிறுவனம் பயனாளர்களின் நன்மைக்காக தனது ஜிமெயில் INBOX ஆப்பில் தேடுதலை எளிமையாக்கியுள்ளது. நமது இமெயில் கணக்கில் ஆயிரக்கணக்கான இமெயில்களை டெலிட் செய்யாமலேயே நாம் இருந்துவிடுவோம். திடீரென ஒரு முக்கியமான இமெயிலை தேடும்போது தவித்துபோவோம். இதற்காகவே கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் ஆப்பை தயாரித்தது. இதன் மூலம் முக்கிய மெயில்களை நாம் எளிதாக தேர்ந்தெடுக்க முடிந்தது. மேலும் snooze செய்து தேவையான நேரத்தில் மெயில்களை வாசிக்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் பயனாளர்களுக்கு மேலும் வசதிகயை ஏற்படுத்தி தரும் விதத்தில் கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் ஆப்பில் மாற்றம் ... Read More »

இருபத்தொரு நொடிகளில் விற்றுத் தீர்ந்த Coolpad Note 3 Lite

சீன நிறுவனத்தின் தயாரிப்பான Coolpad Note 3 Lite வெறும் 21 நொடிகளில் 30,000 யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் பயனாளர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் சீன நிறுவனமொன்றின் தயாரிப்பான Coolpad Note 3 Lite, கடந்த வியாழனன்று 30,000 யூனிட்டுகளை வெறும் 21 நொடிகளில் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் CEOசையது தாஜீத்தீன், இது எங்களது அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து மக்களுக்கும் மிக எளிமையான வகையில் தொழில்நுட்பம் கிடைக்க நாங்கள் எடுத்த முயற்சிக்கு ... Read More »

3 மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் லாபம் : ஃபேஸ்புக்கின் புதிய மைல்கல்

பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஒரு பில்லியன் டாலர்கள் அதாவது 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடந்துள்ளது. ஒரு காலாண்டில் ஒரு பில்லியன் டாலர் லாபம் என்ற மைல்கல்லை ஃபேஸ்புக் முதன்முறையாக தொட்டுள்ளது. கடந்த ஆண்டு தங்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் தங்கள் வேகமான முன்னேற்றம் தொடரும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் 159 கோடி பேர் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும் இதில் 104 கோடி பேர் தினசரி இவ்வசதியை பயன்படுத்துவதாகவும் ... Read More »

‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ : விளையாட்டு போட்டிகளை நேரடியாக ரசிக்க புதிய வசதி அறிமுகம்

உலகிலேயே மிக அதிகமாக 650 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், உலகில் நடைபெறும் முக்கிய விளையாட்டு போட்டிகளை நேரடியாக கண்டு ரசிக்கும் வகையில் ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ என்ற புதிய வசதியை நேற்று அறிமுகம் செய்துள்ளது.. இந்த ‘பேஸ்புக் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம்’ வசதி மூலம் உலகின் எந்த பகுதியில் நடைபெறும் விளையாட்டுகளை நேரலையாக காணலாம். அதில் லைவாக ஒவ்வொரு முறையும் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த விளையாட்டு போட்டியை லைக் செய்வதுடன், நண்பர்களுக்கு ஸேர் செய்யலாம். அந்த விளையாட்டை ... Read More »

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் : சீனாவின் கூல் பேட் நிறுவனம் அறிமுகம்

சீனாவைச் சேர்ந்த கூல் பேட் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ;8999 ரூபாய் பட்ஜெட்டில் கூல்பேட் நோட் 3 மொபைலை அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்த நிறுவனம் புதிய கூல் பேட் நோட் 3 மொபைலை, இந்தியாவில் 6999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் தற்போது அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கும் வகையில் பிரத்யேகமாக விறப்னை செய்யப்படுகிறது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்: பிரைமரி கேமராவின் கீழ் வேகமாக இயங்கக்கூடிய Fingerprint Scanner கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைரகை ஸ்கேனர் கருவி, 360டிகிரி ... Read More »

ஸ்கைப் தரும் அதி உயர் பாதுகாப்பு

இலவச வீடியோ சட்டிங் மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் சேவையினை வழங்கும் உலகின் முன்னணி இணைய நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஸ்கைப் அழைப்புக்களை ஏற்படுத்தும்போது IP முகவரிகளை கண்டுபிடிக்க முடியாதவாறு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப் புதிய சேவையானது 2012ம் ஆண்டு இடம்பெற்ற சைபர் தாக்குதலை எச்சரிக்கையாகக் கொண்டு ஹேக்கர்களால் தனது பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் இவ்வாறு பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளது. எனினும் ... Read More »

மீண்டும் மொபைல்போன் சந்தையில் களமிறங்குகிறது Nokia

2016ம் ஆண்டு மொபைல் போன் சந்தையில் மீண்டும் களமிறங்கவுள்ளதாக Nokia நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2016ம் ஆண்டு நான்காவது காலாண்டில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் களமிறங்கவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் Nokia கருவிகள் வெளியாகும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜிவ் சூரி அறிவித்துள்ளார். மேலும் சாம்சங் கருவிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Nokia கருவிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் Nokia C1 என்ற மொபைலை அதிகாரப்பூர்வமாக ... Read More »

விண்வெளியில் தண்ணீரை பந்தாக மாற்றி ‘டென்னிஸ்’ விளையாடிய வீரர்: வியக்க வைக்கும் வீடியோ

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் தண்ணீரை பந்தாக மாற்றி ‘டேபிள் டென்னிஸ்’ விளையாடிய அற்புதக்காட்சி தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது. விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு அது தற்போது பூமியிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கோட் கெல்லி என்பவரும் ஆவார். நேற்றைய தினம் முதல் ஸ்கோட் கெல்லி விண்வெளி ஆராய்ச்சி ... Read More »

விண்வெளியில் பூத்த முதலாவது தாவரம் இதுதான்

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் பூந்­தா­வ­ர­மொன்றை வளரச் செய்து அங்கு தங்­கி­யுள்ள அமெ­ரிக்க விண்­வெ­ளி­வீ­ரர்கள் சாதனை படைத்­துள்­ளனர். மேற்­படி நிற­வா­தவப் பூந்­தா­வ­ரத்தில் 13 இதழ்­களைக் கொண்ட பூ பூத்­துள்­ளதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டத்தை சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யுள்ள அமெ­ரிக்க விண்­வெ­ளி­வீ­ர­ரான ஸ்கொட் கெல்லி புகைப்­ப­ட­மெ­டுத்­துள்ளார். இது விண்­வெ­ளியில் பூச்­சிய புவி­யீர்ப்பு நிலை­மையில் முதன் முத­லாக வளரச் செய்­யப்­பட்டு பூப்­பூத்த தாவரம் என்ற பெயரைப் பெறு­கி­றது. ஆரம்­பத்தில் இந்தத் தாவரம் வளர்­வ­தற்கு பெரும் சிர­மத்தை எதிர் ­கொண்ட போதும் இறு­தியில் வெற்­றி­க­ர­மாக பூப்­பூத்­துள்­ளது. இந்த பரி­சோ­த­னையின் ஆரம்­பத்தில் ... Read More »

Scroll To Top