Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / திட்டங்கள்

பதிவு வகை: திட்டங்கள்

Feed Subscription

இனியவாழ்வு இல்லச்சிறார்களுக்கான சிறு உதவி வழங்கப்பட்டது!

அனலை FM இணையவானொலியின் 1ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு 15-01-2015 தைப்பொங்கல் தினத்தன்று முல்லைத்தீவிலுள்ள இனியவாழ்வு இல்ல மாற்று வலுவுள்ள சிறார்கள் 60 பேருக்கு 80 ரீ சேட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அனலை எக்ஸ்பிறஸ் குழுமத்தின் முல்லைத்தீவு பொறுப்பாளர் திரு. சுதாகரன் அவர்களால் இனியவாழ்வு சிறுவர் இல்ல முகாமையாளர் திருவாளர் திருச்செல்வம் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Read More »

அனலை எக்ஸ்பிறஸ் நிறுவனத்தின் 1வது சமூக நலத்திட்டம்

தீவக வலயத்தின் அதிகஸ்ட பிரதேசங்களில் ஒன்றாகிய அனலைதீவின் யா/அனலைதீவு வடலுார் அ.த.க வித்தியாலய நிறுவனத்தினரது வேண்டுகோளுக்கினங்க எமது நிறுவனத்தின் சமூக நலதிட்ட நிதியிலிருந்து கடந்த 24-01-2014 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் கிட்டத்தட்ட 35,000/= (இலங்கை நிதி) பெறுமதியான புகைப்படக்கருவியினை எமது நிறுவன இணையத்தள ஆசிரியர் பீட உத்தியோகத்தர் ஊடாக பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் தங்களது மனப்பூர்வமான நன்றிளை எமது நிறுவனத்தினத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம்  பாடசாலை கற்றல் செயற்றபாடுகள் மற்றும் புற செயற்பாட்டு நிகழ்வுகளை ... Read More »

யாழில் அனலை எக்ஸ்பிறஸ் நிறுவனத்தினது 5வது செயற்றிட்டம்

கனடாவினை தலமையகமாக கொண்டியங்கும் அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனத்தினது 05 வது சமூக செயற்றிட்டமாக யா- எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களினது அகில இலங்கை கல்விச்சுற்றுலாவிற்காக ரூபா 60,000/= வழங்கப்பட்டுள்ளது. யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம் எமது நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளினடிப்படையில் எமது நிறுவனத்தினால் இவ்வுதவியினை சமூக செயற்றிட்ட நிதியிலிருந்து வழங்கியிருந்தோம். தீவக வலய பாடசாகைளில் அதி உயர் கஷ்ட பிரதேசங்களில் ஒன்றாக எழுவைதீவு கிராமம் விளங்குகின்றது. பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பிற செயற்றிடங்கள், அகில இலங்கை கல்விச்சுற்றுலாவினை இது வரையும் இம்மாணவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ... Read More »

அனலை எக்ஸ்பிறசின் 2வது சமூக நலத்திட்டம்

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் மற்றுமொரு படைப்பான ‘பாற்காரன்” குறுந்திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் திரையிட்டு வெளியிடப்பட்டது. இதற்கான ஊடக அனுசரனையாளராக அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனம் (கனடா) பங்களிப்பு நல்கியிருந்தது. அகிய இலங்கை கலை இலக்கிய சங்க தலைவர் பொன்.சுகந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர்  திரு.எஸ்.சிவலிங்கராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் சிறப்பு விருந்தினராக மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திருமதி சரோஜினி சிவச்சந்திரனும் கௌரவ விருந்தினராக ஹரிஹணன் பிறிண்டஸ் உரிமையாளர் திரு.சி.ராஜ்குமார் ... Read More »

அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனத்தின் 6வது சமூக செயற்றிட்டம்

தாயக உறவுகளின் வாழ்வின் ஒளிமயமானதோர் நீண்ட குறிக்கோளினை மையமாக வைத்து தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த அனலை எக்ஸ்பிறஸ் மீடியா நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் சமூக நிதித்திட்டத்தின் கீழ் தீவகத்தில் மிகவும் அதிகஷ்ர பிரதேசமாக விளங்கும் யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அப்பாடசாலையினது வேண்டுகோளுக்கிணங்க பல்லூடக தெறிப்பான் (Multi Media Projector) இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இப்பல்லூடக தெறிப்பானை அனலை FM இணையவானொலி யாழ் அலுவலகத்தில் யாழ் முகாமையாளர் திரு க. உதயகுமாரன் மற்றும் ஊடக இணைப்பாளரும் ... Read More »

அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினரின் 3வது சமூக நலத்திட்டம்…!

கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் மேற்படி இணைய ஊடக நிறுவனம் பல்வேறு சமூக, கலாச்சார பணிகளை தாயகப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி பகுதியில், பெற்றோரை இழந்தும், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் பாடசாலை செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 600.00 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. அண்மையில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேற்படி வித்தியாலய அதிபர் திருமதி சி.பரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ... Read More »

Scroll To Top