Monday , June 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம்

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

அழகை மெருகூட்டும் அப்பிள்

தினமும் ஒரு அப்பிள் சாப்பிட்டால் வைத்தியரை நாட வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள். அத்தனை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அப்பிள் பழத்தை கொண்டு பெண்கள் ‘பேஸ் பக்’ போட்டு கொள்ளலாம். சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 மேசைக்கரண்டி அப்பிள் விழுது 1/2 கரண்டி பால் பவுடர், ½ கரண்டி பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து காய்ந்ததும் கழுவி விடவும். அப்பிள் விழுது, தக்காளி விழுது, பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ... Read More »

நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்

பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்வது போலவே நகங்களை அலங்கரிப்பதற்கு அதிக அக்கறை காட்டுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துவதில்லை இப்போது நகத்தின் வலிமையை பாதுகாக்கும் வழியை பார்க்கலாம். அந்தவகையில் நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம் சிலருக்கு நகங்கள் பலவீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும். எனவே ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க ... Read More »

கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். இப் பழத்தில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் ... Read More »

உதட்டின் வறட்சியை போக்க இலகுவான வழிமுறைகள்!

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் உதடு வறட்சி மற்றும் உதடு காய்ந்து போதல். அந்தவகையில், இதற்காக காரணம் மற்றும் அதிலிருந்து தப்பி கொள்வதற்காக வழிகள் தொடர்பில் பார்க்கலாம். நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை அதிகரிப்பே காரணம். ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு ... Read More »

உணவு உட்கொண்ட உடனே நீர் பருகலாமா?

உணவு உட்கொண்ட பின்னர் உடனே நீர் குடிக்கும் பழக்கம் தவறானது என நம்மில் பலரும் நினைக்கிறோம். உணவு உண்ணும்போதும், உண்ட பிறகும் நீர் குடித்தால், ஜீரணக் கோளாறு ஏற்படும் எனவும் கூறுகிறார்கள். உண்மையில், அது அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் இல்லை. சாப்பிடும்போது, விக்கல் எடுத்தாலோ, தாகம் அதிகமாக இருந்தாலோ நீர் குடிக்கலாம். சாப்பிட்ட உடனேயும், நாம் விரும்பும் அளவுக்கு நீர் குடிக்கலாம். இதனால், நமது உடலில் சுரக்கும் ஜீரண நொதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உணவுப் பொருள் ஜீரணத்தின்போது, பலவித படிமாறுதல்களை சந்திக்கிறது. அந்த ... Read More »

உலர் திராட்சையின் மருத்துவக் குணங்கள்!

உலர் திராட்சை பழமானது  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக் கூடியது. இதில் ஏராளமான மருத்துவப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. திராட்சையுடன் ஒப்பிடும் போது, உலர் திராட்சையில் ஏராளமான பலன்கள் இருக்கின்றன. நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளது. அதனால் முடி உதிர்வு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். நாள்தோறும் உணவில் உலர் திராட்சையை சிறிது சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி நீங்கும். ரத்தச் சோகை ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் காலங்களில் ... Read More »

சித்தமருத்துவ அழகுக் குறிப்புகள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை சேர்த்து குழைத்து உடம்பில் தடவி, பயத்தம் மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். ஒரேஞ்ச் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சவர்க்காரம் உபயோகித்து கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். பருமனாக இருப்பவர்கள் எடையை குறைப்பதற்கு தினமும் காலையில் ... Read More »

புளியை கொண்டு சருமத்தை பராமரிக்கும் முறைகள்

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளியை கொண்டு சருமத்தை எப்படி பராமரிப்பது என்று சில ஆலோசனைகளை தருகின்றோம் அவற்றை பார்த்து நீங்களும் பயன்பெருங்கள். சரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக் புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள விட்டமின்கள், ஒன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் ... Read More »

கொட்டாவி பற்றிய சில தகவல்கள்

ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவதை கண்டிருக்கின்றோம். அதற்கு என்ன காரணம் என்று அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது பற்றி நாங்கள் இப்போது பார்க்கலாம். உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி. குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தூக்கம், அசதியின் அறிகுறியே, கொட்டாவியாக வெளிப்படுகிறது. வாய், நாக்கு, தசைகளை ஓய்வு செய்திட கொட்டாவி உதவுகிறது. சலிப்பான சூழல் மற்றும் அலுப்பான ... Read More »

முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. முடி அதிகமாக கொட்டுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. முடி உதிரும் பிரச்சினைக்கு நெல்லிக்காய் தைலம் சிறந்த தீர்வாக அமைகின்றது. பச்சை நெல்லிக்காய், துளசி இலை, வித்து நீக்கிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள். அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, சாற்றின் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த ... Read More »

Scroll To Top