Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம்

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

மருதாணி சிவப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

மருதாணி நல்ல நிறம் வர வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து அக்கலவையை கைகளில் வைத்த மருதாணி காய்ந்த பின்னர், பஞ்சின் உதவியால் தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்தால் மருதாணி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும். மருதாணி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல் உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால் கையில் உள்ள மருதாணியின் நிறம் அதிகரிக்கும். கைகளில் உள்ள ... Read More »

இதய நோயிலிருந்து பாதுகாப்பு பெற என்ன செய்யலாம்?

இதய நோய் இன்று பலரையும் வாட்டுகின்ற ஒன்றாக உருவெடுத்தள்ளது. தனிப்பட்ட எமது பழக்கவழக்கங்கள் சீரின்மையினாலோ அல்லது பரம்பரையாகவோ ஏற்படும் இந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் பாதுகாப்பு பெற்று கொள்ள என்ன செய்யலாம்? புகைத்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிற்கும் பழக்கங்களை தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல். உடலுக்கு வேண்டிய அளவு உடற்பயிற்சியை தினமும் செய்தல். பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறுவயதில் இருந்தே மருத்தவரிடம் ... Read More »

தலைமுடி வளராமைக்கு காரணம் என்ன?

தலைமுடி வளராமல் இருப்பதற்குக் காரணம் தண்ணீர், தூசி, மாசுக்கள், ஊட்டச்சத்து இல்லாமை என பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் மற்றுமொரு விடயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தான். தலைமுடியின் நுனிப்பகுதியில் போதிய எண்ணெய்ப்பசை இல்லாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால்  முடி வெடிக்க ஆரம்பிக்கிறது. அதை இயற்கை முறையில் எப்படி சரிசெய்வது? ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வோட்டர் ஆகியவற்றை கலந்து வேர் முதல் முடியின் ... Read More »

குதிக்கால் வெடிப்பு மறைய என்ன செய்யலாம்?

கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பானது காலப்போக்கில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களை ஏற்படுத்த கூடும். எனவே பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டதும் உடனடியாக மாற்றிவிட வேண்டும். எனவே குறித்த பித்தவெப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? சிலருக்கு கடினமான செருப்பு அணிவதாலும், சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினாலும், கால் வெடிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று தோலினால் ஆன காலணியை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை. காலில் வரும் வியர்வையை காலணி உள்வாங்கிக்கொள்ளும். தோல் உலரும்போது ஈரப்பதமுள்ள காலணி நமக்கு பாதுகாப்பாக அமையும். அதிக எடை உள்ளவர்கள், வறண்ட ... Read More »

சருமத்தை மெருகூட்டும் பப்பாசிப்பழம்

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம். பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் ... Read More »

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: அனுஷியா ஸ்ரீசங்கர்

எயிட்ஸ் நோய் வந்த பின் அவஸ்தைப்படுவதை விட வராமல் தடுப்பதற்கு ஏற்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் களப்பணி அலுவலர்கள் கரிசனை காட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு  வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்ததாக களப்பணிகளில் கடமை புரியும் பல்வேறு படித்தரங்களிலுள்ள அலுவலர்களுக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று(வியாழக்கிழமை) வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு உத்தியோகத்தர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டிய வைத்தியர் தொடர்ந்து தெரிவித்ததாவது, ... Read More »

துரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்

நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து. இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய ... Read More »

இளம் சூடான நீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில நொதியங்கள், அமிலங்களை சுரக்கின்றன. ஆகையால் உணவு உட்கொண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உணவு உட்கொண்ட பின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் கலங்கள் உருவாகின்றமை தடுக்கப்படுகின்றதாம். சூடான நீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானம் அடைவதோடு ... Read More »

இதய நோயிலிருந்து பாதுகாப்பு பெற என்ன செய்யலாம்?

இதய நோய் இன்று பலரையும் வாட்டுகின்ற ஒன்றாக உருவெடுத்தள்ளது. தனிப்பட்ட எமது பழக்கவழக்கங்கள் சீரின்மையினாலோ அல்லது பரம்பரையாகவோ ஏற்படும் இந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் பாதுகாப்பு பெற்று கொள்ள என்ன செய்யலாம்? புகைத்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிற்கும் பழக்கங்களை தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல். உடலுக்கு வேண்டிய அளவு உடற்பயிற்சியை தினமும் செய்தல். பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறுவயதில் இருந்தே மருத்தவரிடம் ... Read More »

மாமிச உணவுகள் தரமானவையென எப்படி கண்டறிவது?

கடைகளில் மாமிச உணவுகளை வாங்கும் பொழுது பழுதடைந்ததா அல்லது புதியதா என்பதனை மாமிசம் அடிக்கடி வாங் அனுபவம் உள்ளவர்கள் கண்டறிவார்கள். ஆனால் அனுபவம் குறைவானவர்கள் இலகுவில் கண்டறிய மாட்டார்கள். அதே வேளை எவருமே இறைச்சி தரமானதா எந்தவித கலப்படமும் இன்றி பாதுகாப்பானதா எமக்கு கிடைக்கின்றதா என்பதனை கண்டறிய சிரமப்படுவார்கள். எனவே இறைச்சி வகைகளை வாங்கும் பொழுது தரமானதா? பாவனைக்கு சிறந்ததா எனக் கண்டறிவது எப்படியென பார்க்கலாம். தரமான கோழி இறைச்சியென எப்படி அறிவது? இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம் நிறைய இடங்களில் ... Read More »

Scroll To Top