Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 2)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

ஆயுளை நீட்டிக்கும் உறவு

பல் துலக்கும் பிரஷ்சை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். ஒரு பிரஷ்சை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதன் முனைகள் தேய்ந்து பல்லிலுள்ள கறைகளை நீக்குவதற்கான வல்லமையை இழந்துவிடுகின்றன. கடையில் ‘சாஃப்ட்’ பிரஷ்களை வாங்குங்கள். பல்லின் முழுவட்ட மேற்பரப்பையும் அவைதான் வளைந்து சுத்தம் செய்யும். ஒரு மனிதரின் ஆயுளை நீட்டிப்பதில் முக்கிய அம்சம் வகிப்பது எது? ஒரு மனிதன் நீண்ட நாள் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவோ, உடலிலுள்ள கொழுப்பின் அளவோ, உடற்பயிற்சியோ முதன்மையான காரணங்கள் அல்லவென்று ஹார்வர்ட் ... Read More »

எளிய மருத்துவக் குறிப்புகள்

1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்: பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். 2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்: அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். ... Read More »

ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவ குணங்கள்

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின் சத்துக்களும், செம்பு, மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் எனப்படும் செல், அழிவினை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாக ... Read More »

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்!!

* சர்க்கரை நோய் தாக்குதலை தவிர்க்க நாம் சாப்பிடும் உணவில் மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் ஆகியவை 60:20:20 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். * முதலில் காய்கறிகள், அதுவும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகள் இவற்றில் எல்லாம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றன. * காய்கறிகளைப் போலதான் பழங்களிலும் அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். ... Read More »

இதயத்தை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்

தினமும் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக நெல்லிக்காய் சாப்பிடலாம். வெறும் நெல்லிக்காய் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் ஜுஸ் ஆக குடிக்கலாம். அதுவும் எளிமை தான். நெல்லிக்காய் உடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கலாம். நாட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்றுக் கூறப்படும் பெரிய நெல்லிக்காய் தான் மருத்துவக் குணமுடையது. நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல நெல்லிக்காய் கொழுப்பைக் கரைக்குமாம் மற்றும் கல்லீரல், கணையத்தில் புற்றுநோய்களையும் சரி செய்யக்கூடியது. என்னங்க இனி தினமும் நெல்லிக்காய் ஜுஸ் ... Read More »

மஞ்சள் காமாலை- கீழாநெல்லி -சிறந்த நிவாரணி

இந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்கு வரும் நோய்களானது பல உண்டு அதிலும் மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க நமது முன்னோர்கள் சொன்ன வழிமுறை பல உண்டு கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும். ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும். கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் ... Read More »

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிக மென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள். கர்ப்பிணிகள் , நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் ... Read More »

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்: * பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும். * எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை ... Read More »

முந்திரிப் பழத்தின் மருத்துவ பலன்கள்

* முந்திரிப் பழத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் தன்மையும் உள்ளது. இவை நகங்கள், பற்களை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாட்டை குணப்படுத்துகிறது. * முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. * முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அழுகிவிடும். இதன் காரணமாகவே இந்தியாவில் சாப்பிடுவதற்காக அதிகம் விற்பனையாவதில்லை. நசுங்கிய அல்லது அழுகிய பழங்கள் ... Read More »

கொசுக்களை விரட்ட ஒரு இயற்கை வழி

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு கொசு வரவே வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். வேம்பு இலையை எரித்து வீட்டில் காட்டினால் ஈ மற்றும் கொசுக்கள் அண்டாது. மேலும் கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்,ஹார்ஸ்மின்ட் எனும் தாவரங்களை வீட்டு தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும். வெங்காயச் சாற்றைப் படுக்கையை சுற்றித் தெளித்து விட்டால் கொசுக்கள் வராது. தேங்காய் நார்களை வாங்கி ... Read More »

Scroll To Top