Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 62)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

முட்டையும் கொலஸ்டரோல் பிரச்சனையும்?

ஆனந்தத் தாண்டவம் ஆடாத குறையாக நுழைந்தார் ஒரு பெரியவர். “நல்ல செய்தி ஒண்டு பேப்பரிலை வந்திருக்கு பாத்தியளோ'” என்று கேட்டார். “காலையில் வேலைக்குப் போற அவசரத்திலை தலைப்புச் செய்தியளைப் பார்த்துப் போட்டு ஓடுறதுதான். ஒழுங்காப் பாக்க முடியிறதில்லை. ஏதாவது எஸ் எம் எஸ் தகவல் வந்தால் தான் தெரியும்” என்று சொல்ல வாயெடுத்தும், என்ரை வண்டவாளங்களை அவருக்கு ஏன் சொல்லுவான் என நினைத்து அடக்கிக் கொண்டேன்.’ ”ஏன் என்ன விசயம்” என மட்டும் கேட்டேன். “இப்பத்தைய முட்டையளிலை கொலஸ்டரோல் குறைவாம். முந்தி நாங்கள் முட்டைக் ... Read More »

பொங்கல் மற்றும் விதைகள் (Nuts) – சில பயனுள்ள தகவல்கள்!

பொங்கல் எமது பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. தைப்பொங்கல் போலவே பலருக்கும் சித்திரை வருடப்பிறப்பும் மற்றொரு பொங்கலாகும். அதற்கு மேலே புதூர் நாகதம்பிரான் பொங்கல், நாச்சிமார் பொங்கல், பண்டித்தலைச்சி அம்மன் பொங்கல், வற்றாப்பளை அம்மன் பொங்கல், மந்திகை கண்ணகி அம்மன் பொங்கல் என ஊருக்கு ஊர் வருடா வருடம் வேறு பல பொங்கல்களுக்கும் குறைவில்லை. சிங்களவர்களுக்கு திருநாள் என்றால் கிரிபத் என்பது போல எங்களுக்குப் பொங்கல் எனலாம். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல், வெண்பொங்கல் எனப் பலவகைப்படும். பொங்கலில் என்ன சேர்த்து இருக்கிறார்கள்? ... Read More »

பொடுகுத் தொல்லை

பொடுகு என்பது எமது சிரசின் சருமத்தில் ஏற்படும் ஒரு வகை அழற்சி நோயாகும். சருமம் காய்ந்து அதன் துகள்கள் உதிர்வதுடன் தலையில் சற்று அரிப்பும் இருக்கலாம். இது மற்றவர் முன் சங்கடமாக உணர வைப்பதாக  இருந்தாலும் ஆபத்தான நோயல்ல. இதை அறவே ஒழிப்பது சற்று சிரமம் ஆனபோதிலும் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும். இதற்கென பலவிதமான சம்பூ வகைகள் விறபனையாகின்றன. அதில் செலனியம், சலிசிலிக் அமிலம் மற்றும் நாகம் (salicylic acid, selenium sulfide or zinc pyrithione).இருக்கிறதா என அவதானிக்கவும். பொடுகு கடுமையாக இருந்தால் தினமும் ... Read More »

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை !

நவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது. Bacon, sausage, and ham போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள். ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிலும் பறவையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு, பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள் சநன அநயவ ... Read More »

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்இ எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் ... Read More »

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள் !

உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம், கிட்னி, கண்கள், நரம்புகள் மற்றும் பாதம். பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று. துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் என ... Read More »

எலுமிச்சை:-

எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல. மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல. அது ஒரு உயிரூட்டமான கனி. கனிகளில் பறித்த பின்னும் உயிரூட்டமாக இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. எலுமிச்சைப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் சக்திகள் அளப்பரியது. இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாதது. மேலும் எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து வந்த இடங்களில் அவைகளுக்கு பதிலாக எலுமிச்சையை பலி கொடுப்பதை இன்னும் பார்க்கலாம். அதே சமயம் ... Read More »

உடல் எடையை குறைக்கும் தயிர்

தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது. வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு ... Read More »

அன்னாசிபழத்தின் மருத்துவக் குணங்கள்:

அன்னாசி பழத்தில் வைட்டமின் டீ உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற ... Read More »

வெங்காயம்

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார். மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி ... Read More »

Scroll To Top