Wednesday , May 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 2)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு சில ஆலோசனைகள்!

பெண்களுக்கு குறைந்தபட்சமாக ஆறு தொடக்கம் எட்டு மணி நேர நித்திரை அவசியம். ஆனால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது சாத்தியப்படாது. இதுபோன்ற நேரங்களில், நாம் மேற்கத்திய பழக்கத்தை பின் தொடரலாம். வெளிநாடுகளில் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைகளை நம்மூர் போல அருகிலேயே படுக்க வைக்க மாட்டார்கள். தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு தாயும் நன்கு உறங்குவார். தாய்ப்பாலை ‘Express Breast Milk’ என்கிற முறையில் சேமித்து வைப்பது, குழந்தைக்குத் தேவை எனும்போது புகட்டுவது, அதுவரை நன்றாக உறங்குவதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறை. இந்த முறையில் ... Read More »

காலையில் எழுந்ததும் செய்யக்கூடாதவைகள்!

நம் உடல், ஒரு நாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும் தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. * ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் ... Read More »

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. நமது உடம்பில் செலினியம் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். எனவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விரைவில் விடுபடலாம். நண்டு சாப்பிடுவதால், அது நமது வளர்ச்சி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது நமது ... Read More »

தர்பூசணி விதையின் பயன்கள்

கோடைக்காலத்தில் விலைக்குறைவாக அதிகளவில் கிடைக்கும் தர்பூசணி விதையிலும் ஏராளமான நன்மைகள் உண்டு. ஒரு கையளவு தர்பூசணி விதையை ஒரு லீட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டிப் பருக வேண்டும். இந்த பானத்தை 3 நாட்கள் தொடர்ந்து குடித்து ஒரு நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் குடிக்கும்போது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதோடு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடனும் இருக்கும். தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை தொடர்ச்சியாக குடிக்கும்போது இதயம் ஆரோக்கியமாக இயங்கும். அத்துடன் தலைமுடி பாதிக்கப்படுவது ... Read More »

எலுமிச்சை சாற்றின் நன்மைகள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம். ஆனால் தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் எலுமிச்சை சாற்றின் நன்மைகளை பார்க்கலாம் 1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சினையை சீராக்குகிறது. 2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. 3. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது. 4. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. 5. ... Read More »

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள். நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு ... Read More »

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இளநீர்

கோடை காலத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முதலில் தங்களின் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உஷ்ணத்தை கொடுக்கும் உணவுகளை தவிர்த்து , குளுமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்தவகையில் தயிர், மோர், இளநீர் போன்றவை உடலின் வெப்பத்தை குறைக்கும். கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை தடுப்பதற்கு பெரும்பாலோனோர் குளிர்சாதனங்களை விடவும் இளநீரைத்தான் அருந்துகின்றனர். ஒரு நபர் தினமும் இரண்டிற்கு மேற்பட்ட இளநீர் குடித்தால் அவரின் உடலில் ஏற்படும் வறட்சியின் அளவு 50 வீதத்தால் குறையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மே மற்றும் ... Read More »

மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, சமையலில் மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும், சுத்தம் செய்யும் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அகன்ற வாளி ஒன்றில் நீரை நிரப்பி அதில் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பாதங்களை அதில் நன்கு ஊற வைத்து பின் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் பாதங்களில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு பாதங்களும் அழகாக இருக்கும். அதிகமாக வியர்வை வெளியேறும் பிரச்சினை இருப்பின் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அக்குளில் ஸ்ப்ரே செய்து கொண்டால் வியர்வை ... Read More »

அவகாடோ பழத்தின் மருத்துவக் குணங்கள்

பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அவகாடோ பழத்தில் கொழுப்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, விட்டமின் கே1, விட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறந்த பங்காற்றுகின்றது. கொலஸ்ட்ரோலை  குறைக்கும் :- அவகாடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரோல் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். நார்ச்சத்து மிக்கது :- அவகாடோ பழத்தில் ... Read More »

இரவுவேளைகளில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

தூங்குவதற்கு செல்வதற்கு முன்னர் சருமத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும். சருமத்தை பராமரிப்பதில் பகல்வேளைகளில் காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் இரவு வேளைகளில் கடைப்பிடிப்பதில்லை. இரவில் தூங்குவதற்கு செல்லும் முன்பாக முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. அப்படி தேய்த்தால் முகத்திலுள்ள எண்ணெய் பசைத்தன்மை வெளியேறிவிடும். வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும். மேக்கப் போட்டிருந்தால் ... Read More »

Scroll To Top