Sunday , May 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 20)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

ஆரோக்கியம் தரும் பிஸ்தா

இன்றைய கால கட்டத்தில் உடல் எடை என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. இதற்காக பலரும் மருந்து வகைகளை உட்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் அற்ற மாற்றத்தினை பெற்றுக் கொள்ளலாம். அந்தவகையில் பிஸ்தாவில் நல்ல ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது. பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது. வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு ... Read More »

ஆரோக்கியம் தரும் ப்ரோக்கோலி

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. எனவே ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு ... Read More »

அதிகப்படியான சதை குறைக்க உதவும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது மனிதனுடைய வாழ்வில் உணவை விட மிக முக்கியமானது. ஆனால் அதனை யாரும் விரும்பி செய்வது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பலரும் பல நோய்களை எதிர்க்கொள்ள உணவு பழக்கவழக்கங்கள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். அந்தவகையில், இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை விரைவில் கரைய ஆரம்பிக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கைகளை தலைக்கு பின்புறமாக கொண்டு சென்று முட்டி ... Read More »

தோப்பையை குறைக்கும் அன்னாசி

அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையத் தொடங்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அன்னாசிப் பழமானது அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளித் தருகிறது. குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அன்னாசிப் பழத்தில் உள்ள தாதுச் சத்துகள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கின்றன. அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், பித்தக் கோளாறுகள், ... Read More »

புருவங்கள் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர குறிப்புக்கள்

புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும். சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும். அதற்கு சின்ன விஷயங்கள் செய்தால் போதும் சில வாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எப்போதும் இரவுகளில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே இரவுகளில் புருவத்தை மசாஜ் செய்து எண்ணெய் தடவினால் விரைவில் பலனளிக்கும். இதனால் வேர்கால்கள் தூண்டப்பட்டு, புருவம் வளர உதவும். அதன் பின் கீழே உள்ள குறிப்புகளை செய்து ... Read More »

கரும்புள்ளிகளை நீக்க இயற்கை வழிகள்

கரும்புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க பெரிய அளவில் செலவுகள் செய்ய தேவையில்லை இயற்கை பொருட்களை கொண்ட அவற்றை நீக்கலாம். * 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான கொட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும். * 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ... Read More »

அழகிய கூந்தல் பராமரிப்பிற்கு கடுகு எண்ணெய்

பெண்களின் அழகில் முக்கிய பங்கு கூந்தலுக்கும் உண்டு. அந்தவகையில், முடி உதிர்வும், நரையும் இன்றை காலகட்டத்தில் பெண்களுக்கு பாரிய சவாலாக இருக்கின்றது. இந்நிலையில், கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி நரை முடியை தடுக்கலாம் என்று பார்க்கலாம். *வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும். *ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட ... Read More »

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar)  கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), ஃபிரக்டோஸ் (Fructose), குளுகோஸ் (Glucose)  உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber)  கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தைக் கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழைப்பழம் ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும்கூட. ஆகவே ... Read More »

உடல் எடையைக் குறைக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல் படி உணவுச் சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். செய்யக் கூடியவை பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றூம் பிற சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது க்ளாஸ் ... Read More »

எளிய இயற்கை வைத்தியம்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ... Read More »

Scroll To Top