Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 30)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

ரத்தக் கட்டு பிரச்சினையை குறைக்க சிறந்த வழிகள்

காலை, மதியம் மற்றும் மாலையில் என ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைக்கின்றது. இது மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை மிகவும் குறைக்கிறது. எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. தினமும் பொட்டாசியம் அளவு 1600 மில்லி ... Read More »

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

வேகமாக ஓடும் இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு ஓய்வு என்பதும் மிகவும் முக்கியமாகும். அந்தவகையில், யோகா, தியானம் போன்றவற்றினூடாக மனிதன் தன்னுடைய உடலுக்கு மட்டுமன்றி உள்ளத்திற்கும் ஒரு ஓய்வை வழங்க வேண்டும் 1. தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோசத்துடனும், ஆரோக்கியத்துடனும், இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. 2. தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. 10 நிமிடம் தியான நிலையில் உட்கார்ந்து சுவாசிக்கும்போது தூய்மையான காற்று உள்ளே செல்கிறது. அதனால் மார்பு விரிவடைந்து ... Read More »

தேனின் மருத்துவ குணங்கள்

உலகில் சிறந்த மருந்து என்றால் அது உணவு தான். அதிலும் இயற்கையாக கிடைக்கக்கூடிய உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல அழகையும் பெற்று தருகின்றது, இன்றைய காலகட்டத்தில், அழகு என்ற ஒரு விடயத்திற்காக பலர் செயற்கையாக பொருட்களை பயன்படுத்துகின்றார்கள். அவ்வாறான பயன்பாட்டால், பல பக்க விளைவுகளே ஏற்படும். அந்த வகையில், தேன் மருத்தவ குணம் கொண்ட ஒரு பொருளாகும். அது பல நோய்களை குணமாக்க வல்லது. அதுமட்டுமன்றி அழகு சாதன பொருட்களுள் தேன் முக்கிய பங்கை வகிக்கிறது. * ஒரு தேக்கரண்டி தேனை காலை, ... Read More »

முகச் சுருக்கத்தில் இருந்து விடுபட மாம்பழ ஃபேஷியல்

மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள். மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியுடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். பின் முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு 20 நிமிடம் நன்றாக காய விடுங்கள். பிறகென்ன சுருக்கங்கள் முகத்திற்கு பை பை சொல்லும். வேண்டாத சதைகள் இறுகி, முகத்தில் வரும் ... Read More »

இடுப்புவலி, கால் வலி, கால் முட்டி வலி என்பவற்றை போக்க ஒரு சிறு வைத்தியம்

அதிகமானவர்கள் இன்று உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதுடன், வாகனங்களில் நீண்ட நேர பயணங்களையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடுப்பு வலி அதிகம் உண்டாக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏற்படும் இடுப்புவலி உட்பட கால் வலி, கால் முட்டி வலி என்பவற்றை போக்குவதற்கு ஒரே ஒரு சிறந்த வைத்தியம் உள்ளது. காலின் பாதப் பகுதியில் உள்ள கரண்டை எனும் இடத்தில் ஒரு பெரு விரலை வைத்து அதற்கு அருகாக மற்றுமொரு பெரு விரலை வைக்கும்போது உள்ள இடத்தில் சுமார் 5 நொடியிலிருந்து 10 நொடிகள் வரை அழுத்திக்கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ... Read More »

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம். அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ... Read More »

இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பல பிரச்சினைகள்

இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும் போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பிரச்சினை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பின்னும் தாய் – சேய் இருவர் உடல் நலனும் ... Read More »

ஆண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்

சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம். சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கல்சியத்தால் உருவானவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் ... Read More »

வயிற்றுள்ள கொழுப்பை குறைக்க உதவும் ஜூஸ்

நம்மில் பலருக்கும் வேண்டாத ‘வளர்ச்சி’யாய் தொப்பை இருக்கிறது. அதற்கு, நமது வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் ஒரு காரணம். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் கரைக்க, தண்ணீர், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழச்சாறு, புதினா, இஞ்சி கலந்த ‘ஜூஸ்’ உதவும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால் தொப்பை கரையும். எனவே ஜூஸில் இடம்பெறும் பொருட்களில் என்னென்ன சத்துகள் அடங்கியிருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ளலாம். * வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம். அதோடு, உடலின் அல்கலைன் அளவை சீராகப் பராமரிக்க ... Read More »

ஆரோக்கிய உணவு முறை

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ என்று சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கும் போது, எந்த நோய்க்கும் உணவே சிறந்த மருந்து ஆகும். உடல்நலம் குறித்த அக்கறை அதிகரித்துவரும் இந்நாளில், ‘ஆரோக்கிய உணவு முறை’ அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவு முறை என்றால், என்ன வகையான உணவுகளை உட்கொள்வதுஎன்பது பற்றி பலருக்கு தெரியாது. எனவே அதனை தெரிவித்துக்கொள்ளலாம். சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றின்படி, மத்திய தரைக்கடல் உணவுமுறை (Mediterranean Diet) நீண்ட, ஆரோக்கியமான ஆயுட்காலத்தைத் தரக்கூடியதாகும். உண்மையில் இது ஒன்றும் புதிதல்ல. நாம் பாரம்பரியமாகப் பின்பற்றிவந்த ... Read More »

Scroll To Top