Sunday , May 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 4)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

அழகு தரும் உப்பு

உப்பு உணவிற்கு சுவையைத் தர பயன்படுவது மட்டுமின்றி, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஒருவர் தங்களது அழகை அதிகரிக்க க்ரீம்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். முக்கியமாக உப்பு சரும அழகை மட்டுமின்றி, தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, ... Read More »

சருமத்தை பாதுகாக்கும் ஒலிவ் எண்ணெய்

கோடை வெயிலில் வறண்டு பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. இந்த கவலைகளுக்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும். குளிக்கும் போது ஒலிவ் எண்ணையை தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் பொலிவாகவும் காட்சி அளிக்கும். ஒலிவ் எண்ணெய்களில் பல வகை இருக்கின்றன. சரும பாதுகாப்பிற்கு ‘எக்ஸ்ட்ரா விர்ஜின் ஒயில்’தான் சிறந்தது. ஏனெனில் அதில்  இரசாயன கலப்படம் இல்லை. சருமத்திற்கும் நல்லது. கோடைக்காலத்தில் உடலில் உள்ள பழைய கலங்கள் உதிர்வது வழமையைவிட அதிகரிக்கும். ஒலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்து ... Read More »

புருவத்தை அழகாக வைத்திருக்க சில ஆலோசனைகள்

 மெலிதாக புருவம் இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் அதன் அழகு வெளிப்படாது. அடர்த்தியான புருவமும் இமையும், சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற நாங்கள் தருகின்ற குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். அழகுக் குறிப்புகளை ஏதோ ஒரு நாள் மாத்திரம் செய்து பார்த்துவிட்டு பின்னர் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்ந்து பயன்படுத்தும் போதே பலன் கிட்டும். ஆகவே இக் குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்திப் பாருங்கள். மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும். 01. பால் : பஞ்சை பாலில் நனைத்து புருவத்தின் ... Read More »

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. அதுமட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு காணப்படுகின்றது. எம்மில் பலருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வேப்பிலையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம். *வயிற்று பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது. புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு. *வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம்பழத்தை சாப்பிடலாம். வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு ... Read More »

உடல் பருமனை குறைக்க தயிர் சாப்பிடலாம்!

தயிர் சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது எனவும் தினமும் மூன்று வேளை தயிர் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறைந்து, உடல் தோற்றம் அழகாக இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோடைக்கு காலத்தில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும்? தயிர் சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கும் என்ற ஒரு விஷயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் நிறை குறையவும் அதிக வாய்ப்புள்ளது. தயிர் சாப்பிடுவதால், எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். சில தயிர் ... Read More »

சருமத்தை மேலும் அழகாக்கும் தக்காளி

தக்காளியை வைத்தும் சருமத்தின் அழகை அதிகரிக்கலாம். பழுத்த தக்காளியை பசை போல விதையுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை கருமை நிறம் மறையும். தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாற்றை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாற்றுடன் சில ... Read More »

கொத்தமல்லி தழையின் மருத்துவ குணங்கள்

உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவை. கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது அந்தவகையில் கொத்தமல்லித் தழையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம் *கொத்துமல்லி தழை வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். சுவையின்மையை போக்கும். *செரிமான ... Read More »

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்கள், ஆகாரங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை அதிகளவு குடிக்க வேண்டி இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீரை குடிக்க அனைவருக்கும் பிடிக்காது. அதனால்தான் பெரும்பாலான சுவைமிகு குளிர் பானங்கள், பழரசங்கள், சர்பத் போன்றவைகளை குடித்து உடலையும், உள்ளத்தையும் குளுமைப்படுத்தி கொள்கின்றனர். எண்ணற்ற பழரசங்களும், குளிர்பானங்ளும் பாட்டிலும், பெட்டியிலும் அடைத்து வைத்து கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதேனும் ஓர் இரசாயன கலவை ... Read More »

தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்

அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் ... Read More »

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

கோடையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். ஆனால் பலர் கோடைகாலத்தில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்துவிடுகிறார்கள். அதிக எண்ணெய், கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. ஏனெனில் அழுக்கு சேர்ந்து பொடுகு பிரச்சினை ஏற்படும். அதனால் எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை கழுவ வேண்டும். குளித்து முடித்தவுடன் தலைமுடியை உலரவைப்பதற்காக டிரையர் மெஷினை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனால் குளித்துமுடித்த பின்பு நன்றாக தலையை துவட்டி விடவேண்டும். கூந்தலை இயற்கையாக உலரவைப்பதே சிறந்தது. வெப்பம் படர்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் ... Read More »

Scroll To Top