Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 56)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

கர்ப்பிணிகள் இளநீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவம்

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் ... Read More »

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா?

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் “பெனடோல்’ பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் “பெய்ன்கில்லர்’ எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும். அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, “தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்’ என்ற அமைப்பு உள்ளது. ... Read More »

கைக்குதல் அரிசி பற்பல சுகாதார நன்மைகள் கொண்டுள்ளது

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியின் பதப்படுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும். தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள ... Read More »

வெற்றிலையின் மகத்துவம்

வெற்றிலையானது வெள்ளிலை, நாகவல்லி எனும் இரண்டு இனங்களுக்குள் உள்ளடக்கப்படுவதுடன் நிறம், மணம், சுவை போன்ற குணாம்சங்களினால் வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என மூன்று வகைப்படுகிறது. சித்தமருத்துவத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை வெற்றிலை கொண்டுள்ளதுடன், தமிழரின் பாரம்பரிய வாழ்வில்  ‘தாம்பூலம் தரித்தல்’ எனும் பெயருடன் முதன்மை வகிக்கின்றது. வாய்த்துர்நாற்றம் நீக்கல், அமிலத்தன்மை அதிகரிப்பை கட்டுப்படுத்தல், உமிழ்நீர் சுரத்தலை அதிகரித்தல், நாச்சுவையின்மையை நீக்கல், பல்வலி, நாவரட்சி ,கிருமி, புளித்தலேப்பம் போன்றவற்றை நீக்கும்  சித்தமருத்துவராகவும் இவ்வெற்றிலை பணிபுரிகின்றது. முறையான பாவனைகளால்  மேற்கூறிய நன்மைகளையும்,  முறையற்ற ... Read More »

சளியால் அவஸ்தையா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீங்க

சளி, காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதிகளவு சிரமத்தை சந்திக்க நேரிடும். * சளி பிடித்திருக்கும் நேரத்தில் பால் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சளியின் அளவை அதிகரித்து நோய்க்கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரித்துவிடும். * இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம், ஆனால் செயற்கை இனிப்பு சுவை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். * எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள், பாஸ்ட்புட் உணவுகளை தவிர்க்கவும். * ஆல்கஹால் பருகினால் ... Read More »

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

கீரைகள் என்றாலே சத்துகள் நிறைந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் தினசரி உணவுகளில் கீரையை எடுத்துகொள்ளவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். கீரைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்குக்கு ஒவ்வொரு பயன் உள்ளது. ஆனால் வல்லாரை கீரையில் அனைத்து பயன்களுமே அடங்கியுள்ளன என்பது தான் ஆச்சரியம். இதன் காரணமாக தான் நோய்களுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்தில் வல்லாரை கீரைக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பயன்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது * வல்லாரையை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் ஞாபக சக்தி ... Read More »

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும். உப்பு ரொப்ப தப்பு.

“உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!” என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்! காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்… இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன. ‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த ... Read More »

மார்புச்சளிக்கு ஏலப்பொடி

தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும். இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை ... Read More »

எலுமிச்சம்பழத்தின் மகிமைகள்

கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற சக்திதான் எலுமிச்சம்பழம். இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விஷயமாகும். காலப் போக்கில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு பல உண்மைகள் விஞ்ஞானிகளை வியப்பிலாழ்த்தி வருகிறது. 1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளென் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம் பழம் ரத்தத்தைத் து}ய்மை செய்துள்ளதை உலகுக்கு உணர்த்தினார். சர் ராபர்ட் மைக்கேரியன் என்ற மருத்துவ அறிஞர் காய்ச்சலைப் போக்கும். ... Read More »

தேங்காயின் மருத்துவக் குணங்கள்

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் ... Read More »

Scroll To Top