Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலகுவாக வெற்றி கொண்டது இலங்கை

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில். இந்தப் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 08 விக்கட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி ... Read More »

இலங்கைக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகிறார்

இலங்கை அணிக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகி வருகிறார். தனது மகனை தயார்படுத்தும் வகையில் சனத் ஜெயசூரிய அவருக்கு பயிற்சியளித்து வருகிறார்.  இலங்கைக் கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித் தலைவரான சனத் ஜெயசூரியா.  இடது கைதுடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில்  6973 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டியில்  13,430 ஓட்டங்களையும் குவித்து சாதனைப் படைத்தவர். மேலும் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு செய்துள்ளார்.  இந்நிலையில் தனது மகன் ரனுக்கிற்கு கிரிக்கெட் பயிற்சியளித்து வருகிறார். சனத் ஜெயசூரியாவைப் போலவே ... Read More »

”மாவட்டம் மாகாணம் தாண்டி சாதித்தது வரலாற்று வெற்றி!

நாவாந்துறை சென்மேரிஸ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 02 உதை பந்து தொடரின் இறுதியாட்டம் (25.11.2015) பி.ப 3.00 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்ச்சி மைதானத்தில் ஆரம்பமானது. பலம் வாய்ந்த கொழும்பு யங்லெவின் நியூ ஸ்ரார் அணியும், யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகமாகிய நாவாந்துறை சென்மேரிஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதல் ஆட்டம் பரபரப்பாக அமைந்தாலும் போட்டியின் போது இரு அணி வீரர்களின் உபாதைகள் அதனால் ஏற்பட்ட போட்டி தாமதங்கள் போட்டியில் தொய்வு நிலை காணப்பட்டாலும் பெரும் திரளான ரசிகர்களின் ஆரவாரங்களுடன் போட்டி பரபரப்பாக அமைந்தது. ... Read More »

யாழிலிருந்து 02 வீரர்கள் சீனா பயணம்!

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான 43வது சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று சீனா (Mongolia) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை  குழு 19 உதை பந்தாட்ட அணியில் யாழ் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செபமாலை நாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகியோரே இன்று பயணமாகின்றனர். இவர்கள் பாடசாலை மட்டப் போட்டிகளில் மட்டு மன்றி இலங்கையின் முதல் தர போட்டிகளான primer league division-1 போட்டிகளிலும் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கை அணியில் ... Read More »

பரபரப்பான முக்கிய ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரீஸ் வெற்றி!

உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பிரிவு 2 க்கு தெரிவுக்கான முக்கிய போட்டியில் பாடுமீன் சென்மேரீஸ் அணிகள் புத்தூர் எவரஸ்ட் மைதானத்தில் இன்று (31.07.2015) மோதிய போட்டியில் ஆட்டம் ஆரம்பம் ஆகியதில் இருந்து இரு அணி வீரர்களும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினானர். முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவுமின்றி சமநிலையான நிலையில் காணப்பட்டன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் சென்மேரீஸ் அணியினாரால் 1 வது கோல் போடப்பட்டு ஆட்டம் பரபரப்பான கட்டத்தினை நோக்கி தொடர்ந்தன. போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கையில் ... Read More »

மட்டுவில் வளர்மதி தொடர் கிண்ணம் நாவாந்துறை சென்மேரீஸ் வசம்!இறுதியில் கைகலப்பால் பரிசளிப்பு இரத்து

மட்டுவில் வளர்மதி சனசழூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பலம் பொருந்திய நாவாந்துறை சென்மேரீஸ் அணியை எதிர்த்து மற்றுமொரு பலம் பொருந்திய அணியான குருநகர் பாடுமீன் அணி மோதியது. பெரும் திரளான ரசிகர்கள் பார்வையிட பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் இரு அணிகளும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தின. சென்மேரிஸ் வீரர் ஜக்சன் அடித்த பந்து எதிரணி வீரர் கோல் பரப்புக்குள் தடுக்க முற்பட்ட போது அவரினால் பந்து கோலக்கப்பட்டு முதலாவது கோல் ஒன் கோலாக ... Read More »

தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை 19-07-2015 அன்று  கொக்குவில் இந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இடம் பெற்ற யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்வில் பன்னாலை கணேசன் இளைஞர் கழகத்தின் ஆண்கள் அணியினர் 1ம் இடத்தையும் பெண்கள் அணியினர் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். பன்னாலை இளைஞர் கழக வெற்றிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதிபெற்றுள்ளது. Read More »

மட்டுவில் நடாத்தும் 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு பாடுமீன்மற்றும் சென்மேரீஸ் தகுதி

மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் (20.07.2015) இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து ஆடிய நாவாந்துறை சென்மேரீஸ் அணிக்கு ஆரம்பத்தில் நெருக்கடியினை கொடுத்த றோயல் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகித்த போதிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்மேரீஸ் அணியினர் ஆட்டத்தினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியாட்டத்தில் சென்மேரீஸ் வீரர் நிதர்சன் தனது அணிக்காக 1வது கோலை பெற்றுகொடுத்ததுடன் தொடர்ந்து சற்று நேரத்தில் சென்மேரீஸ் முன்னனி வீரர் ... Read More »

தேசிய சீனியர்உதைபந்தாட்ட அணியில் அண்ணன்! தேசிய ஜீனியர் உதைபந்தாட்ட அணியில் தம்பி!

இலங்கை தேசிய உதைபந்தாட்ட யாழ் வீரரான S. ஞானரூபன் அவர்களின் சகோதரர் யா/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவனான S. யூட் சுமன் இலங்கை தேசிய (Under-19) உதைபந்தட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிக்கான அணியில், தேசிய அணியில் இடம் பெற்றதுடன் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ரீதியிலான பல போட்டிகளில் திறமையினை வெளிப்படுதியதைத் தொடர்ந்து அனியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற ... Read More »

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (04-07-2015) அன்று கல்லூரியின் தலைவர் திருந.சபாரத்தினசிங்கி அவர்களின் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு சு.திருஞானசம்பந்தர் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்டத்தின் பணிப்பாளர் உயர்திரு பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நினைவுப் பேருரையினை கல்லூரியின் பழைய மாணவியும், சுற்றாடல் உத்தியோகத்தருமான திருமதி ஆரணி மயூரன் அவர்கள் வழங்கினார். பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சாதனை படைத்த அத்தனை மாணவர்களும் இவ்விழாவின் போது கௌரவிக்கப்பட்டனர். விழாவின் இறுதியில் சிறப்பு நிகழ்வாக ... Read More »

Scroll To Top