Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 15)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

யாழிலில் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் சம்பியன்

யாழ் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட அணிகளிற்கிடையிலான தலைவர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. இவ் இறுதிப் போட்டி 01-03-2014 சனிக்கிழமை மாலை துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப் போட்டியில் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்ட ஆரம்பித்து சிறிது நேரத்தில் இரு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் பலவற்றை தவறவிட்டன. இரு அணிகளும் மாறி மாறி எதிரணிகளின் கோல் பரப்பை ஆக்கிரமித்த போதும் கோல் ... Read More »

யாழில் இராணுவம் விமானப்படைகளிற்கிடையில் உதை பந்து போட்டி

சம்பியன்ஸ் ஒஃப் சம்பியன்ஸ் உதைபந்தாட்டப் போட்டியில் இலங்கை இராணுவப்படை அணி சம்பியனாகியது. இப் போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் 01-03-2014 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இலங்கை விமானப் படை அணியும் இலங்கை இராணுவப் படை அணியும் இப் போட்டியில் மோதியது. இரு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்பங்களைத் தவற விட்டமையால் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. சமநிலை உடைப்பு உதை வழங்கப்பட்ட போது 4:3 கோல்கள் அடிப்படையில் இலங்கை இராணுவப்படை அணி போட்டியில் வெற்றியீட்டி சம்பியன்ஸ் ஒஃப் சம்பியன்ஸ் கிண்ணத்தை தமதாக்கியது. செய்தி நிருபர் – ... Read More »

உடுவில் பிரதேச செயலக பிரதேச பெருவிளையாட்டுப் போட்டிகள் முடிவுகள்

உடுவில் பிரதேச செயலக பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் படி ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் மல்லாகம் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. 14 அணிகள் பங்குபறிய போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு சுன்னாகம் நியூ வொரியர்ஸ் இளைஞர் கழக அணியும், இணுவில் கலையொளி இ.க அணியும் மோதின. இதில் 25:12 என முதல் செட்டினை சுன்னாகம் நியூ வொரியர்ஸ் இளைஞர் கழக அணி கைப்பற்றிய போதும் அடுத்த செற்றினை 16:25 என்னும் புள்ளிகள் அடிப்படையில் ... Read More »

யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் அணி வெற்றி

சுன்னாகம் நியூவொரியர்ஸ் விளையாட்டுக் கழகம் கந்தன் நல்லதம்பி ஞாபகார்த்தமாக  நடாத்திய அணிக்கு 5 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இவ் இறுதிப் போட்டியில் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகமும் நாவாந்துறை சென் மேரிஸ் அணியும் மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாவாந்துறை சென் மேரிஸ் அணி 5:1 என்னும் கோல் கணக்கில் வெற்றியீட்டியது. போட்டியின் சிறந்த வீரராக நாவாந்துறை சென் மேரிஸ் அணியின் வீரன் யூட் தெரிவானார்.   Read More »

வட தென் துடுப்பாட்டத்தில் வென்றது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயது பாடசாலை பிரிவு 02 அணிகளுக்கிடையிலான போட்டி ஒரு நாள் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் கொழும்பு கோட்டை ஆனந்த சஸ்ராலயா கல்லூரி அணிக்குமிடையிலான போட்டி 26-02 2014 அன்று கொழும்பு ஆனந்த சஸ்ராலயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 198 ஓட்டங்களால் கொழும்பு கோட்டை ஆனந்த சஸ்ராலயா கல்லூரி அணியை வென்றது. நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. எம்.சிந்துராஜன், பி.துவாரகசீலன் ... Read More »

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ணத்திற்கான போட்டி-2014

பருத்திதுறை உதைபந்தாட்ட லீக் நடாத்திய இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டியின் இறுதி ஆட்டமும் பரிசில் வழங்கல் நிகழ்வு இன்று 2014/02/27 வியாழக்கிழமை பி.ப 3.30 மணிக்கு கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன நிறைவேற்று பணிப்பாளர் திரு.அனுரா டீ சில்வா பொதுச்செயலாளர் உபாலி ஹேவகே அவர்களும், கலந்து சிறப்பித்தார்கள். இறுதியாட்டத்தில் வதிரி டயமண்ட்ஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நஜீவன்ஸ் அணி மோதியது. ஆட்டத்தின் முதற்பாதியில் எந்த ஒரு அணியும் கோல் ... Read More »

வீரர்களின் போர் இன்று ஆரம்பம்

யாழில் வீரர்களின் போர் என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது. கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் யாழ்ப்பாணம் வீரர்களின் போர் என்று வர்ணிக்கப்படும் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியும் மோதுகின்றன. இதற்கமைய குறித்த கிரிக்கெட் போட்டி இன்று தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. 14 ஆவது தடைவையாக நடைபெறும் குறித்த போட்டி இரண்டு நாள் இன்னிங்ஸ் போட்டியாக நடைபெறுகின்றது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சார்பாக ... Read More »

Scroll To Top