Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 3)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

யாழ் இந்துவின் மாணவன் உயரம் பாய்தலில் 1ம் இடம்!

யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலய பழைய மாணவனும், தற்போது யா/ இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் எழுவை மண்ணின் மைந்தன் கந்தசாமி தனுசன் அவர்கள் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் பங்குபற்றி முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார். இவர் கடந்து வந்த பாதை கற்களும் முற்களும் நிறைந்தது. தன்னுடைய தீவிர முயற்சியினால் சாதனை படைத்துள்ளார். ஆரம்ப காலத்தில் தனுசனது உயர்வுக்கு காரணமாக இருந்தவை தென்னோலையின் இரண்டு பாதிகள், ஒரு ஊன்றுகோல். ... Read More »

யாழ்- மஹாஜனக் கல்லூரி மாணவி கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை!

பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்- மஹாஜனக் கல்லூரியின் வீராங்கனையான ஜெகதீஸ்வரன் அனிதா தேசிய சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். போட்டியில் ஜெகதீஸ்வரன் அனிதா 3.32 மீற்றர் உயரத்துக்கு தாவினார். இதன் மூலம்  2012 ஆம் ஆண்டு  தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் நிலை நாட்டப்பட்ட 3.30 மீற்றர் உயர தேசிய சாதனை முறியடிக்கப்பட்டது . அந்த ... Read More »

தீவுகளுக்கான உதைபந்தாட்ட கிண்ணம் -2014 போட்டிகள் ஆரம்பம்!

தீவக உதைபந்தாட்ட கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் வேலணை துறையூா் கடற்றொழிலாளா் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரனையுடன் ஜயனாா் சனசமூக நிலையம், ஜயனாா் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் 66 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜயனாா் சனசமூக நிலையமும் ஜயனாா் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் தீவுகளுக்கான உதை பந்தாட்டப்போட்டியை இன்று 03.10.2014 வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சின்னையா சிவராசா போல் அவா்கள் ஆரம்பித்து வைத்தாா் . இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை தவிசாளா் விளையாட்டுக்களை ஆரம்பித்து உரையாற்றும்போது போட்டியை வீரா்கள் போட்டியாக மட்டும் நினைத்து விளையாடவேண்டும். வெற்றிதோல்வியினை ... Read More »

யாழ் இந்து கல்லூரி மாணவா்கள் பளு தூக்கும் போட்டியில் சாதனை!

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பளுத்தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. புதன்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரி மைதானத்திறக்க அழைத்து வரப்பட்ட வீரர்கள் மாலைகள் அணவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். வட மாகாணப் பாடசாலைகள் பளு துாக்கும்போட்டியில் பதினெட்டு பதக்கங்களை வென்றுள்ள போதிலும் எட்டுப் பதக்கங்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரி அதிபர் தலைமையில் நடை பெற்ற இந் ... Read More »

யாழ் வேம்படி மாணவி ஜே.டினோஜா பளு தூக்கலில் சாதனை!

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில் நேற்று நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வேம்படி மகளீர் கல்லூரியை சேர்ந்த ஜே.டினோஜா 19 வயது பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார். இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாலை அணிவித்து குறித்த மாணவி வரவேற்கப்பட்டதுடன் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்துடன் ... Read More »

இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் நாடு திரும்பினர்கள்

ஆசிய இளையோர் கரப்பந்து (Volley Ball ) போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை (05) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ... Read More »

கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஜோ ரூட் சதத்தின் துணையுடன் ஆறுதல் வெற்றியை பெற்றது. இருப்பினும் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி போட்டி இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி லீட்சில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் இரு மாற்றமாக கேரி பேலன்ஸ், ஹாரி குர்னே நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிரெட்வெல்இ பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் தவால் குல்கர்னிக்கு ... Read More »

உலகின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

உலகின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான நார்மன் கோர்டான் இன்று ஜோகன்னஸ் பர்க்கில் காலமானார். அவருக்கு வயது 103. காலவரம்பின்றி நடத்தப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களில் உயிருடன் இருந்த கடைசி வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1911ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் போக்ஸ்பர்க்கில் பிறந்த கோர்டான், 1938ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1939ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோர்டான் விளையாடினார். அப்போது ஒரு ஓவருக்கு 8 பந்துகள் ... Read More »

தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு

யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் ரெலோ அமைப்பின் செயலாளர் கென்றி மகேந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் தீவகப் பகுதிக்குச் சென்று தீவகத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் விந்தனின் பாடசாலை நண்பர் ஒருவரின் உதவியுடன், ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டு இன்றைய தினம் ... Read More »

யாழ் பல்கலைக்கழக ஆட்ட நாயகனாக ஞான ரூபன் தெரிவு

யாழ் பல்கலைக்கழக வீரர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அனைத்து பல்கலைக்கழகங்களையும் வீழ்த்தி உதைபந்தாட்டத்தில் தேசிய சாம்பியனானது யாழ். இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஊதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் மோதிக்கொண்டன. போட்டி ஆரம்பமாகிய சில ... Read More »

Scroll To Top