Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 4)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

26வது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து 26வது மாவட்டமட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை (12, 13) துரையப்பா விளையாட்டரங்கில் நடாத்தியது இதில் இடம்பெற்ற மெய்வல்லுனர் நிகழ்வுகளைக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த தட கள வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டனர். இதன் படி 13 ற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த தட வீரனாக யாழ்ப்பாண பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தைச் சேர்ந்த ஜே.அபிமனும், பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தைச் ... Read More »

26வது யாழ் மாவட்ட இளைஞார் விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச இளைஞார் கழக சம்மேளனம் முதலாம் இடத்தை சுவீகரித்தது.

26வது யாழ் மாவட்ட இளைஞார் விளையாட்டுப் போட்டியின் அனைத்து நிகழ்வுகளின் அடிபடையில் நல்லூர் பிரதேச இளைஞார் கழக சம்மேளனம் முதலாம் இடத்தை சுவீகரித்தது. யாழ்மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து மாவட்ட மட்ட இளைஞர்  விளையாட்டுப் போட்டிகளை (12, 13) துரையப்பா விளையாட்டரங்கில் நடாத்தியது. இதில் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளின் அடிப்படையில் நல்லூர் பிரதேச இளைஞார் கழக சம்மேளனம் 79 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை சுவீகரித்தது இரண்டாம் இடத்தை 39 புள்ளிகளைப் பெற்று தெல்லிப்பளை பிரதேச இளைஞார் ... Read More »

கால்பந்தாட்டத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக்கழகம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது. கடந்த 8 ஆம் திகதி முதல் கனகபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வந்த மேற்படி சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன. விலகல் முறையில் இடம்பெற்ற இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஜெயந்திநகர் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில், உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் 2:0 என்ற கோல் கணக்கில் ... Read More »

உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாணபிரதேச இளைஞர்கழகசம்மேளனம் சம்பியனாகியது

யாழ்மாவட்டமட்ட 26வது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் சம்பியனாகியது. யாழ்மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப்போட்டிகளை (12, 13) துரையப்பா விளையாட்டரங்கில் நடாத்தியது. இதன்போது இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச இளைஞர் கழகசம்மேளன அணியும் யாழ்ப்பாணப்பிரதேச இளைஞர்கழக சம்மேளன அணியும் மோதியது. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றாலும் போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல்களைப் பெறவில்லை,  இதனால் தண்ட உதைமூலம் போட்டி முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ... Read More »

கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் க.இராஜதுரை ஞாபகார்த்தமாக யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது. முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியின் போட்டிகள் சனிக்கிழமை (12) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. சுற்றுபோட்டியின் இறுதிபோட்டிக்கு நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியும் நுழைந்தன. போட்டியின் ஆரம்பம் முதல் நெல்லியடி மத்திய கல்லூரி அணியின் ஆதிக்கம் களத்தில் நிலைபெற அவ்வணி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் ... Read More »

அச்சுவேலி மேற்கு மகளிர் விவகார குழுவினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு

அச்சுவேலி மேற்கு மகளிர் விவகார குழுவினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பா.உ சில்வெஸ்திரி அலண்டின் (உதயன்) வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரதீபன், வலி.கிழக்கு பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவரும் வலி.கிழக்கு ஈ.பி.டிபி இணைப்பாளருமான ஜங்கரன், வலி தென்மேற்கு பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவர் அரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   Read More »

எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின. மேற்படி சுற்றுப்போட்டிகளில் யாழ்ப்பாணம், தெற்கு, முப்படைகள், மற்றும் பொலிஸ் ஆகியவற்றிலிருந்து 31 அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் பலாலி இராணுவ மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்றன. ஆண்களுக்கான இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை இராணுவ அணியும் நீர்கொழும்பு தங்கொட்டுவ ஜனமத அணியும் மோதின. 40 ... Read More »

அளவெட்டிப் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு

அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுக் கழகத்தினர் அளவெட்டிப் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வினை அண்மையில் சிறப்பாக நடாத்தினர். நிகழ்வில் பங்குகொண்ட இளைஞர்களுக்காகவும் தாச்சி(கிளித்தட்டு) உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன. நிகழ்வின் பிரதம் அதிதியாக வலி வடக்கு பிரதேச சபை உபதவிசாளர் ச.சஜீவன் கலந்து கொண்டார். Read More »

19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி

வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் ... Read More »

இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி வெற்றி

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி 150 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மெல்போன் நகர யாராவலி துடுப்பாட்ட சங்க அணியினை வென்றது. 17 வயதுப்பிரிவு அணிகளுக்கான மேற்படி சிநேகபூர்வமான இருபது – 20 துடுப்பாட்டப் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் (04) வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது. இதில் அவுஸ்ரேலியா மெல்போன் நகர யாரா வலி துடுப்பாட்ட சங்க அணியும் யாழ்.மாவட்ட தெரிவுத் துடுப்பாட்ட அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ... Read More »

Scroll To Top