Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 5)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவி ஈட்டியெறிதலில் முதலிடம்

கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவி பி.கல்சியா 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். போதிய விளையாட்டு வசதிகளற்ற, அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலையிலிருந்து பங்குபற்றி தேசியப் போட்டிக்குத் தெரிவானதன் மூலம் தீவக வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது அவர் கௌரவிக்கப்பட்டார் ! Read More »

வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய பெண்களுக்கான மென்பந்து மற்றும் கலைப்பந்தாட்ட போட்டிகள்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் அமரர் திருமதி கெங்காதேவி பாலச்சந்திரன் நினைவாக பெண்களுக்கான மென்பந்து மற்றும் கலைப்பந்தாட்ட போட்டிகளை அண்மையில் நடாத்தியது. கழுகுகள் விளையாட்டுக்கழக தலைவர் சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்க ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் கம்பர் மலை வித்தியாலய அதிபர் ரவீந்திரன் உடுப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் குமாரு சந்திரமோகன் ... Read More »

26வது இளைஞர் விளையாட்டு விழாவின் வலைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ் மாவட்ட அணி தகுதி பெற்றது.

26வது இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட ஆண்கள் வலைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ் மாவட்ட அணி தகுதி பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்டதேசிய மட்ட பெரு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான வலைபந்தாட்டப் போட்டிகள் களுத்துறை விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் யாழ் மாவட்ட அணி காலிறுதிப் போட்டியில் அம்பாந்தோட்டை அணியுடன் மோதியது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய யாழ் மாவட்ட அணி 24 புள்ளிகளைப் பெற்ற போதும் பதிலுக்கு அம்பாந்தோட்டை அணியால் 13 புள்ளிகளையே பெற முடிந்தது. ... Read More »

எழுவைதீவு பற்றிமா அணி கரப்பந்தாட்டத்தில் சம்பியன்

எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழகம் தீவக விளையாட்டுக் கழகங்ளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடரை நடாத்தியது. இந்தப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஊர்காவற்றுறை றேஞ்சஸ் விளையாட்டுக்கழகமும் எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழக அணியும் தகுதி பெற்றன. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றய தினம் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமானது. ஐந்து சுற்றுக்களைக்கொண்ட போட்டியில் மூன்று சுற்றுக்களை தனதாக்கி எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழகம் சம்பியனானது. முதல் சுற்றை 24ற்கு 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் றேஞ்சஸ் அணி தனதாக்கியிருந்தாலும் இரண்டாம் மூன்றாம் சுற்றுக்களை முறையே 24ற்கு 19, ... Read More »

தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகத்தின் தாச்சி சுற்றுப் போட்டி

தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் நடாத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது. தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆலடி சிந்து அணியும் மயிலிட்டி வள்ளுவர் அணியும் மோதியது.. முன்னதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளின் படி ஆலடி சிந்து அணியும் புதுமடம் வைகறை அணியும் மோதிய முதலாவது அரையிறுதியில் ஆலடி சிந்து 5 பழங்களைப் பெற பதிலுக்கு புதுமடம் வைகறை 4 பழங்களையே பெற்றது. இதனால் இப் போட்டியில் ஆலடிசிந்து 5:4 ... Read More »

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியன்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்திய அணிக்கு 5 பேர் கொண்ட ‘புட்சால்‘கால்பந்தாட்டப் போட்;டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது.  சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (21) விலகல் முறைப்படி இடம்பெற்றதுடன் இச் சுற்றுப்போட்டியில்யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவின் 8 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன. முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:2 என்ற கோல்கள் கணக்கில் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியினையும், ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிஅணியினையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.  இறுதிப்போட்டியில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:0 என்ற கோல்கள் கணக்கில் ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் கல்லூரிஅணியினை வீழ்த்திச் சம்பியனாகியது,  மூன்றாமிடத்திற்கான போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிஅணியினை வென்றது.  வெற்றிபெற்ற அணிகளுக்கான கேடயங்கள் கல்லூரியின் 120ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்ட தினம் அன்று வழங்கப்படவுள்ளதாகஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். Read More »

யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி வலைப்பந்தாட்டப் போட்டி

யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பெண்களில் அரியாலை ஜக்கிய அணியும், கலப்பு அணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் சம்பியனாகின. இந்தச் சுற்றுப்போட்டி அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் சனிக்கிழமை (21) இடம்பெற்றது. பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 9 கழகங்களின் அணிகள் பங்குபற்றியிருந்தன. இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய அணி மோதியது. நான்கு சுற்றுக்களாக (ஒவ்வொன்றும் 15 நிமிடங்கள்) நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் முதற் சுற்றினை அரியாலை ஜக்கிய ... Read More »

தீவகம் தழுவியரீதியில் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழகம் தீவகப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் முகமாக தீவகம் தழுவியரீதியில் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்று 23.06.2014 திங்கட்கிழமை பி.ப 02 மணியளவில் எழுவைதீவு புனித தோமையர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பொதுமைதானத்தில் பற்றிமா விளையாட்டுக்கழக தலைவர் திரு.ஜே.எஸ். ஜெவீந்திரன் அவர்கள் முன்னிலையில் திரு.கி.கியோமர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி அன்ரன் எழிலரசி யோகநாயகம், யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.மோகனதாஸ், , ஊர்காவற்றுறை பிரதேச செயலக திட்டமிடற் பணிப்பாளர் ... Read More »

‘ஹென்றீசியன் பிறிமியர்லீக்’ மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுத்தொடர் யூன் 22 ந் திகதி ஆரம்பம்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் இளவாலை யங் ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘ஹென்றீசியன் பிறிமியர்லீக்’ மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுத்தொடர் யூன் 22 ந் திகதி தொடக்கம் யூலை 23 திகதி வரை 72 போட்டிகள் கொண்டதாக நடைபெறவுள்ளது. இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பல மின்னொளியில் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தின் 64 முன்னணி அணிகள் இச் சுற்றுத்தொடரில் பங்குபற்றுகின்றன. குழு – ஏ இல் 32 அணிகளும், குழு – பி இல் 32 அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதற்சுற்று ... Read More »

வட மாகாண மட்ட பாடசாலைகலிற்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்

வட மாகாண மட்ட பாடசாலைகலிற்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஆண்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட யாழ் இந்துக் கல்லூரி அண்யினரைப் படத்தில் காணலாம். இறுதிப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனகியமை குறிப்பிடத்தக்கது. Read More »

Scroll To Top