Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / வெளியூர் விளையாட்டு

பதிவு வகை: வெளியூர் விளையாட்டு

Feed Subscription

உலகின் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

யாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள். அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் M.S.dhoni – $28.7 மில்லியன் Virat Kohli – $24.9 மில்லியன் Chris Gayle – $7.5 மில்லியன் Virender Sehwag – $25.8 மில்லியன் Shane Watson – $5.5 மில்லியன் Shahid Afridi – $5.3 மில்லியன் Gautam Gambhir – ... Read More »

டில்ஷானின் இறுதி ஒருநாள் போட்டி – வெற்றியை நலுவ விட்ட இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதேவேளை ஓய்வை அறிவித்துள்ள இலங்கையின் அதிரடி நாயகன் டில்ஷானுக்கு இது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் இரசிகர்களின் ... Read More »

நிறைவடைந்தது ஒலிம்பிக் – அமெரிக்காவுக்கு முதலிடம்

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா எதிர்பார்த்தது ... Read More »

நீச்சல் அதிசயம்!. ஒலிம்பிக் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்த கனடிய பெண்

கனடாவை சேர்ந்த Penny Oleksiak றியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற 100மீற்றர் தடையற்ற நீச்சல் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளார். ரொறொன்ரோவை சேர்ந்த இவர் யு.எஸ்.சை சேர்ந்த சிமோன் மனுவல் என்பவருடன் 52.70 நேரத்தில் வந்து சமநிலையில் தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக்கில் முதலாவது கனடிய நீச்சலாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். தங்க பதக்கத்தை வென்றதுடன் நான்கு பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றுள்ளார். இவர்கள் இருவரும் அவர்களது சமநிலை நேரத்திலும் ஒலிம்பிக்கில் சரித்திரம் படைத்துள்ளனர். கனடிய ஒலிம்பிக் குழு Oleksiak கை அவரது ... Read More »

அமெரிக்காவின் சாதனை நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்சின் தழும்புகளுக்கு காரணம் என்ன?

அமெரிக்காவின் சாதனை நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது 19வது தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த பதக்கம் எந்த அளவுக்கு பிரபலமானதோ அந்த அளவுக்கு மைக்கேலின் தோள்பட்டையிலும் முதுகிலும் வட்ட வடிவத்தில் காணப்பட்ட தழும்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது தீக்காயமாக இருக்கலாம் எனவும் பச்சை குத்திக்கொண்டிருக்கலாம் எனவும் பலர் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தழும்புகளுக்கு கப்பிங் என்ற மருத்துவ முறை தான் காரணம். இது காயங்களை குணப்படுத்தவும் வலிகளை போக்குவதற்கும் பயன்படும் மருத்துவ முறை ஆகும். ... Read More »

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்றது

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை துப்பாக்கி சுடு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அமெரிக்க முதல் தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்றது: 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அசத்தல் ரியோ: தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று கோலாகல கலை நிகழ்ச்சியுடன் ‘ரியோ ஒலிம்பிக்- 2016’ தொடங்கியது. இன்று பெண்களுக்கான 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தகுதிச் சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி ... Read More »

நுவன் குலசேகர ஓய்வு

இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 33 வயதாகும் நுவன் குலசேகர 48 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

ஐ.பி.எல் போட்டிகளில் மாலிங்க விளையாட முடியாது

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை அவரை குறித்த ... Read More »

வீழ்ந்தது இங்கிலாந்து – கிண்ணம் மே.தீவுகள் வசம்

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது. அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதன்படி கல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனவே துடுப்புடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்கள் கைகொடுக்காத போதும் அதிரடியாக ஆடிய ரூட் 54 ஓட்டங்களை விளாசினார். இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 ... Read More »

இறுதிப் போட்டியில் மே.தீவுகள் – இங்கிலாந்து மோதல்

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி 193 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. அந்த அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து, 196 ஓட்டங்களை ... Read More »

Scroll To Top