Sunday , May 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / வெளியூர் விளையாட்டு (page 3)

பதிவு வகை: வெளியூர் விளையாட்டு

Feed Subscription

இலங்கை அணி 484 ஓட்டங்களுடன் பலமான நிலையில் உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். Read More »

டோனியின் அதிரடி 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா திரில் வெற்றி

இந்தியா–தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஒருநாள் போட்டில் 150 ரன்கள் எடுத்து அசத்திய ரோகித் சர்மா, இந்த போட்டியில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய ரஹானே, ஷிகார் தவானுடன் சேர்ந்து, இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், 23 ரன்கள் எடுத்திருந்த போது ... Read More »

வேம்படி மகளீர்கல்லுாரி மாணவி இந்தியாவில் பளுதுாக்கிச் சாதனை படைத்தார்.

புனே நகரில் இன்று நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் வேம்படி மகளிர் மாணவி J.டினேஜா வெண்கலபதக்கம் (மொத்தநிறை 126Kg) பெற்று கொண்டார் இச்சாதனையானது தமிழ்வீராங்கனை ஒருவர் விளையாட்டு துறையில் பெற்ற அதி உச்ச பெறுபேறாக கணிக்கப்படுகிறது இவருக்கான பயிற்சிகளை விதன்வழங்கி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. Read More »

2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து, ரஷ்யா தகுதி பெற்றுள்ளது

ஐரோப்பிய கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் தொடரின் தகுதி காண் போட்டிகள் அனைத்திலும் இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ஈ குழுவிற்கான தகுதிகாண் சுற்றின் 10 ஆவதும் இறுதியுமான போட்டியில் லித்துவேனிய அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.லித்துவேனிய தலைநகர் வில்னியஸ்சில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் 62 ஆவது நிமிடத்தில் கோலொன்றை ... Read More »

Pan Am Games ல் கனடா இரண்டு நாட்களில் 16 பதக்கங்களை வென்றது.

கனடா- 2015 Pan Am  விளையாட்டுக்களின் ஆரம்ப நாளன்று எட்டு பதக்கங்களுடன் மைதான வாசலை விட்டு வெளியேறிய கனடா இரண்டாம் நாள் முடிவில் இரட்டிப்பு பதக்கங்களை வென்றுள்ளது. கனடிய விளையாட்டு வீரர்கள் ஆறு தங்கபதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளனர். 10 தங்க பதக்கங்கள், எட்டு சில்வர் மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென் கனடா முன்னணியில் நிற்கின்றது. Read More »

மரதனோட்டப் போட்டியில் 92 வயது மூதாட்டியின் சாதனை.

சாதனைக்கு வயதில்லை என்பார்கள், சாதனை புரிவதற்கு நோயும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், 92 வயது மூதாட்டி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பெயர் ஹரியட் தொம்ஸன் என்பதாகும். சன்டியாகோ நகரில் பிரசித்தம் பெற்ற மரதனோட்டப் போட்டியில் பங்கேற்றார், ஹரியட். குறித்த தூரத்தை ஏழு மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் மற்றும் 36 செக்கன்களில் அவர் ஓடிக் கடந்தார். ஒரு மரதனோட்டப் போட்டியை பூர்த்தி செய்த ஆகவும் வயது கூடிய வீராங்கனை என்ற பெருமை இந்த மூதாட்டிக்கு கிடைக்கிறது. இத்தனைக்கும் இவர் மூன்று தடவைகள் புற்றுநோயின் தீவிர தாக்கத்திலிருந்து ... Read More »

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் (ஸ்பெயின்)– அமெரிக்காவின் சோக் பலப்பரீட்சை நடத்தினர். இதில் நடால் 6–3, 6–1, 5–7, 6–2 என்ற செட் ... Read More »

உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெண்கலம்

உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மகளிர் ரீகர்வ் பிரிவு அரையிறுதியில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தென்கொரிய வீராங்கனை Ki Bo Bae-யிடம், தீபிகா தோல்வியடைந்தார். இதையடுத்து வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சர்வதேச தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்கொரியாவின் Chang Hye Jin-ஐ எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் 6-2 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி வென்றார். Read More »

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரேசிலின் ப்ரூனோ சோரஸ் இணை முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், சானியா மிர்சா- புருனோ சோர்ஸ் இணை, ஜெர்மனியின் லேனா கிரேன்பீல்டு, நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜெர் இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில், முதல் நிலை ஜோடியான சானியா இணை 2-6, 2-6 என்ற நேர்செட்களில் தோல்வியை தழுவியது. Read More »

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2015

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள “The National Badminton Centre” Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் ... Read More »

Scroll To Top