Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / வெளியூர் விளையாட்டு (page 4)

பதிவு வகை: வெளியூர் விளையாட்டு

Feed Subscription

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2015

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள “The National Badminton Centre” Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் ... Read More »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!

உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் நீடிக்கின்றனர். உலகக் கோப்பை தொடரில் 2 சதங்கள் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க், முதன்முறையாக முதலிடத்தைப் ... Read More »

புலம் பெயர் ஈழத்தமிழ் மாணவி சர்வதேச டென்னிஸ் Jalisco Junior Cup இனை தனதாக்கியுள்ளார்!

எல்சவடோரில் இடம் பெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பிருந்தா. குமார் ராமசாமி, தனதாக்கியிருக்கிறார். டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து தன் திறமையை வெளிப்படுத்தி வரும் பிருந்தா. குமார் ராமசாமி, மெக்ஸிகோவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச டென்னிஸ் Jalisco Junior Cup போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் எல்சவடோரில் இடம் பெற்ற Copa El Salvador சர்வதேச டென்னிஸ் போட்டியில், வெற்றி பெற்றிருக்கிறார். மெக்ஸிகோவைச் சேர்ந்த Alexia Coutino Castllo வை எதிர்கொண்ட பிருந்தா. குமார் ராமசாமி, 6-2 & ... Read More »

கனடிய டென்னிஸ் வீராங்கனை பிருந்தா குமார் ராமசாமி தொடர் வெற்றிச்சாதனை!

சிறு வயது முதலே டென்னிஸ் விளையாட்டில் தன் திறமையை வெளிப்படுத்தி வரும் பிருந்தா குமார் ராமசாமி, மெக்ஸிகோவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச டென்னிஸ் Jalisco Junior Cup போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போட்டியில் (Nandini Das ) நந்தினி டாஸை எதிர்கொண்ட பிருந்தா குமார் ராமசாமி, 7-6 & 7-5 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்வரும் திங்கள் கிழமை எல்சவடோரில் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கு பெறும் பிருந்தா குமார் ராமசாமி வெற்றி பெற அனலை எக்ஸ்பிறஸ் ... Read More »

மெல்போர்ன் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா துவங்கியது!

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களில் கோலாகலமாக துவங்கியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலும் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கியது. இதில் கிரிக்கெட் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் பிரபலங்களின் பேச்சு, காதை பிளக்கும் இசைமழை, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, முர்ரே 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2வது நிலையில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா போராடி வெற்றி பெற்றார். தனது சக நாட்டவரான அலெக்சாண்ட்ரா பனோவாவை எதிர்த்து விளையாடிய ஷரபோவா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் பறிகொடுத்தார். எனினும் 3வது செட்டில் சுதாரித்து ... Read More »

உதைப்பந்தாட்ட செய்தி மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் – பார்சிலோனா அபார வெற்றி

லா லிகா கால்பந்து தொடரில், டிபோர்டிவோ அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடிக்க பார்சிலோனா அணியின் வெற்றி உறுதியானது. ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் லீக் தொடரின் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனாவும், டிபோர்டிவோ அணியும் மோதின. போட்டியின் ஆரம்பத்தில் சில நிமிடத்திலேயே மெஸ்ஸிக்கு ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை டிபோர்டிவோ அணியின் கோல் கீப்பர் பேப்ரிசியோ தடுத்தார். ... Read More »

ரொனால்டோவுக்கு 2014ன் சிறந்த கால்பந்து வீரர் விருது!

2014-ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்துவீரர் விருதை போர்சுக்கல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். ஐரோப்பிய கால்பந்து கிளப்களில் முன்னணியில் உள்ள ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ துபையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இதில் உரையாற்றிய ரொனால்டோ, விருது வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தம்முடைய கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுவதாகவும், கூறியுள்ளார். வரும் ஜனவரி மாதம் உலகின் உயர்ந்த விருதான பலோன் டி ஆர் எனப்படும் தங்க கால்பந்து விருது அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ... Read More »

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் அபினவ் பிந்த்ரா!

புனேயில் நடைபெற்று வரும் தேசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா ஏர் ரைபிள் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். விஜய் குமாரும் வெற்றி பெற்றார். புனேயில் நடைபெற்று வரும் 58-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற ஒரே இந்திய வீரரான அபினவ் பிந்த்ரா (வயது 32) மொத்தம் 208 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். ராணுவ வீரரான சத்தியேந்திர சிங் ... Read More »

பிலிப் ஹியூக்ஸ் மரணம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் ... Read More »

Scroll To Top