Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / வெளியூர் விளையாட்டு (page 5)

பதிவு வகை: வெளியூர் விளையாட்டு

Feed Subscription

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்! இறுதிப் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி திரில் வெற்றியை ருசித்து தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கடைசி ஆட்டம் இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கேதர் ஜாதவ், அஸ்வின் சேர்க்கப்பட்டனர். கேதர் ஜாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பது ... Read More »

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம்! உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து உலக சாதனை படைத்துள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரஹானேவும் களம் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 40 ஆக இருந்தபோது ரஹானே விக்கெட்டை மேத்யூஸ் கைப்பற்றினார். 24 பந்தில் 28 ரன் அடித்த ரஹானே 6 பவுண்டரிகளை விளாசினார். இதைத் தொடர்ந்து ராயுடு களம் ... Read More »

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கேப்டன் சுட்டுக் கொலை!

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெய்வா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜோகன்ஸ்பர்க் நகரின் அருகே வாஸ்லூரஸ் என்ற இடத்தில் வசித்து வந்த அவரது வீட்டிற்குள், அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளனர். அவர்களுடன் வந்த மற்றொரு நபர் மெய்வா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்திருக்கிறார். வீட்டிற்குள் சென்ற இருவர் மெய்வாவை துப்பாக்கியால் சுட்டனர். வீட்டில் இருந்த மற்ற யாரையும் அவர்கள் சுடவில்லை. பின்னர் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெய்வா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொள்ளையடிக்க வந்தவர்களே மெய்வாவை ... Read More »

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்னாபிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2அவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் 300 ஓட்டங்களை தாண்டுவது போல் சென்ற தென்னாபிரிக்க அணி, கடைசி 25 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால் ஓட்டவேகம் குறைந்து போனது. அதிகபட்சமாக ஹசிம் அம்லா 119 ஓட்டங்களையும் ... Read More »

அம்மாவுக்கு அன்புப் பரிசளித்த உலகின் அதிவேக மனிதன்!

உசேன் போல்ட் உலகின் அதிவேக மனிதன். 9 விநாடிகளில் நம்மால் என்ன செய்து விட முடியும்? செல்போனில் ஒரு மிஸ்டு கால் கொடுப்பதற்கே 10 செகண்டுகளைக் கொன்றிருப்போம். ஆனால், 100 மீட்டர் ஓட்டப் பந்தய டிராக்கை, அசால்ட்டாக 9.58 விநாடிகளிலும், 200 மீட்டரை 19.19 விநாடிகளிலும் கடந்து உலக சாதனை படைத்து, ஒலிம்பிக்கில் தங்கத்தைத் தட்டிச் சென்ற இந்தக் கறுப்புத் தங்கம், சிறுத்தைக்கு இணையாக ஓடுவார் என்பது நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்! தெரியாத விஷயம் – உசேன் போல்ட் காதலிக்கிறார். இது ஸ்கூப் நியூஸ் இல்லை. காதலி – ... Read More »

கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழந்தது இந்தியா.

இந்தியா மேற்கிந்திய அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி ஜூட் ஜூட் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி அடுத்து நடக்க உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை மட்டுமே இடம்பெற முடியும். முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் உள்ளது. இந்திய அணி தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியிடையே நடந்த ஒருதின தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் ஆஸ்திரேலியா அணி முதல் இடம் ... Read More »

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட ஏழு வீரர்களை காணவில்லை!

தென் கொரியாவில் உள்ள இன்சியானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் கலந்து கொள்ள வந்த வீரர்களில் ஏழு பேரை காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. நேபாள நாட்டை சேர்ந்த மூன்று வீரர்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்களும், வங்காளதேசம் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த தலா ஒரு வீரரும் காணாமல் போனதாக இன்சியான் போலீசார் தெரிவித்தனர். நான்கு நாடுகளின் அணி நிர்வாகிகள், போட்டிகளை நடத்தும் இன்சியான் நிர்வாகிகளை சந்தித்து வீரர்கள் காணாமல் போனது குறித்து முறையிட்டனர். இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ... Read More »

சென்னை சூப்பர்கிங்ஸின் சூப்பர்ஸ்டார் சேலஞ்ச் காணொளி

சாம்பியன் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிது புதிதாக பல வீடியோக்களை அப்லோட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் சாம்பியனான சென்னை அணி, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டயலாக்குகளை சென்னை அணியின் வீரர்களை பேசவைத்து எடுக்கப்பட்ட காணொளி பின்னிணைக்கப்பட்டுள்ளது.   Read More »

ஆசிய விளையாட்டில் 7-வது தடவை தங்கம் வென்று இந்தியா சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கபடிப் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி அறிமுகப்படுத்தப்பட்டது முதலே இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக சாம்பியனாக வலம் வருவது கவனிக்கத்தக்கது. இறுதிப் போட்டியில் இரான் அணியை 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வெல்வது இது 7-வது முறையாகும். ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம் வென்றதன் மூலம் பதக்கப் ... Read More »

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 4-வது வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) கொல்கத்தா நைட் ரைடர்சும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டால்பின்சும் மோதின. இதில் டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக பணியாற்றிய 100-வது ஆட்டம் இதுவாகும். கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கிய கேப்டன் கம்பீர் (12 ரன்) அடுத்து வந்த காலிஸ் (6 ரன்) இருவரும் கிளீன் போல்டு ஆனார்கள். இதன் பின்னர் ராபின் உத்தப்பாவும், மனிஷ் பாண்டேவும் ஜோடி ... Read More »

Scroll To Top