Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு (page 2)

பதிவு வகை: விளையாட்டு

Feed Subscription

இறுதிப் போட்டியில் மே.தீவுகள் – இங்கிலாந்து மோதல்

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி 193 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. அந்த அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து, 196 ஓட்டங்களை ... Read More »

8 விக்கெட்டுக்களால் வீழ்ந்தது இலங்கை

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 19.3 ஓவர்களில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக இலங்கை அணி சார்பில் டில்ஷான் 36 ஓட்டங்களை விளாசினார். இதன்படி 121 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக தென்னாபிரிக்கா களமிறங்கியது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அம்லா ... Read More »

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை; 10 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியை பறிகொடுத்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜே.சி பட்லர் 66 ஓட்டங்களையும் ஜே.ஜே.ரோய் ... Read More »

7 விக்கெட்டுக்களால் வீழ்ந்தது இலங்கை

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. தினேஷ் சந்திமால் 16 ஓட்டங்களுடனும், டில்ஷான் 12 ஓட்டங்களுடனும் வௌியேறினர். பின்னர் அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய மெத்தியூஸ் 20 ஓட்டங்களையும், திஸர பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இதனையடுத்து, 20 ... Read More »

இலங்கையுடனான போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்​கை அணி சார்பாக கப்புகெதர அதிகபட்சமாக 30 ஓட்டங்க​ளைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 26 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார். ... Read More »

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை இலகுவாக வெற்றி கொண்டது இலங்கை

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில். இந்தப் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 08 விக்கட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி ... Read More »

இலங்கையை இலகுவாக வென்றது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி, தோல்வியைத் தழுவியுள்ளதோடு தொடரையும் பறிகொடுத்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்தநிலையில், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் வரிசையாக வௌியேற 18 ஓவர்களுக்கு 82 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. அந்த அணி சார்பில் சேனக்க அதிக ... Read More »

இலங்கைக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகிறார்

இலங்கை அணிக்கு அடுத்த அதிரடி வீரர் தயாராகி வருகிறார். தனது மகனை தயார்படுத்தும் வகையில் சனத் ஜெயசூரிய அவருக்கு பயிற்சியளித்து வருகிறார்.  இலங்கைக் கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித் தலைவரான சனத் ஜெயசூரியா.  இடது கைதுடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில்  6973 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டியில்  13,430 ஓட்டங்களையும் குவித்து சாதனைப் படைத்தவர். மேலும் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு செய்துள்ளார்.  இந்நிலையில் தனது மகன் ரனுக்கிற்கு கிரிக்கெட் பயிற்சியளித்து வருகிறார். சனத் ஜெயசூரியாவைப் போலவே ... Read More »

”மாவட்டம் மாகாணம் தாண்டி சாதித்தது வரலாற்று வெற்றி!

நாவாந்துறை சென்மேரிஸ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 02 உதை பந்து தொடரின் இறுதியாட்டம் (25.11.2015) பி.ப 3.00 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்ச்சி மைதானத்தில் ஆரம்பமானது. பலம் வாய்ந்த கொழும்பு யங்லெவின் நியூ ஸ்ரார் அணியும், யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகமாகிய நாவாந்துறை சென்மேரிஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதல் ஆட்டம் பரபரப்பாக அமைந்தாலும் போட்டியின் போது இரு அணி வீரர்களின் உபாதைகள் அதனால் ஏற்பட்ட போட்டி தாமதங்கள் போட்டியில் தொய்வு நிலை காணப்பட்டாலும் பெரும் திரளான ரசிகர்களின் ஆரவாரங்களுடன் போட்டி பரபரப்பாக அமைந்தது. ... Read More »

இந்திய கிரிக்கெட் வீரா் ஹர்பஜன்சிங் திருமணம் இன்று நடைபெறுகிறது

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35) அவரது நீண்டகால தோழியும் பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக புதன்கிழமை மாலை ஜலந்தரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மெஹந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஹர்பஜனின் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 500 ற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ... Read More »

Scroll To Top