Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு (page 3)

பதிவு வகை: விளையாட்டு

Feed Subscription

நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 35 ரன்கள் வி்த்தியாசத்தில் இந்தியா வெற்றி

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா–தென்ஆப்பரிக்கா மோதும் (பகலிரவு ஆட்டம்) 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விராட் கோலி சதம் (138) விளாசினார். ரெய்னா அரை சதமடித்தார். ஆர்.ஜி. சர்மா (21), ரஹானே (45), தோனி (15) ... Read More »

2016 ஒலிம்பிக் போட்டிகள் – ஒரு மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் விற்பனை நடைபெற்றுள்ளது

பிறேஸிலின் றியோ டி ஜெனிரோவில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு விற்பனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனை ஆரம்பித்து சில மணி நேரத்துக்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கால்பந்து, கூடைப்பந்து, கரப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களே அதிகம் விற்பனையாகியுள்ளதாகவும் அதனை வாங்குவதிலேயே இரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட நுழைவுச்சீட்டு விற்பனையில், ... Read More »

நான் பயந்த ஒரே பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் – சேவாக்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் தான் தடுமாறியதாக ஓய்வு பெற்ற ஷேவாக் தெரிவித்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த ஷேவாக் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் “தனது முதல் டெஸ்ட் போட்டி முதன்முறையாக டெஸ்டில் 300 ஓட்டங்கள் கடந்தது உலகக்கிண்ணத்தை வென்றது.இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்கள் எடுத்தது 281 ஓட்டங்கள் எடுத்த போது வி.வி.எஸ் லக்ஸ்மணன் எழுந்து நின்று கைதட்டியது ஆகிய நிகழ்வுகள் எனது வாழ்வில் மறக்க ... Read More »

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும், போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கோல்களை அடித்து புதிய சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் சார்பில் விளையாடி வந்த ராவுல் என்பவபர் 741 போட்டிகளில் விளையாடி 323 கோல்கள் அடித்து சாதனைப் படைத்திருந்தார். ராவுலின் இந்த சாதனை லா லிகா தொடரின் நேற்றைய போட்டியின் போது ரொன்ல்டோவினால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியின் 30ஆவது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல்அடித்தார். இதன்மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 310 போட்டிகளில் 324 கோல்கள் ... Read More »

இலங்கை அணி 484 ஓட்டங்களுடன் பலமான நிலையில் உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். Read More »

டோனியின் அதிரடி 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா திரில் வெற்றி

இந்தியா–தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஒருநாள் போட்டில் 150 ரன்கள் எடுத்து அசத்திய ரோகித் சர்மா, இந்த போட்டியில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய ரஹானே, ஷிகார் தவானுடன் சேர்ந்து, இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், 23 ரன்கள் எடுத்திருந்த போது ... Read More »

வேம்படி மகளீர்கல்லுாரி மாணவி இந்தியாவில் பளுதுாக்கிச் சாதனை படைத்தார்.

புனே நகரில் இன்று நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் வேம்படி மகளிர் மாணவி J.டினேஜா வெண்கலபதக்கம் (மொத்தநிறை 126Kg) பெற்று கொண்டார் இச்சாதனையானது தமிழ்வீராங்கனை ஒருவர் விளையாட்டு துறையில் பெற்ற அதி உச்ச பெறுபேறாக கணிக்கப்படுகிறது இவருக்கான பயிற்சிகளை விதன்வழங்கி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. Read More »

2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து, ரஷ்யா தகுதி பெற்றுள்ளது

ஐரோப்பிய கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் தொடரின் தகுதி காண் போட்டிகள் அனைத்திலும் இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ஈ குழுவிற்கான தகுதிகாண் சுற்றின் 10 ஆவதும் இறுதியுமான போட்டியில் லித்துவேனிய அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.லித்துவேனிய தலைநகர் வில்னியஸ்சில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் 62 ஆவது நிமிடத்தில் கோலொன்றை ... Read More »

யாழிலிருந்து 02 வீரர்கள் சீனா பயணம்!

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான 43வது சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று சீனா (Mongolia) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை  குழு 19 உதை பந்தாட்ட அணியில் யாழ் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செபமாலை நாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகியோரே இன்று பயணமாகின்றனர். இவர்கள் பாடசாலை மட்டப் போட்டிகளில் மட்டு மன்றி இலங்கையின் முதல் தர போட்டிகளான primer league division-1 போட்டிகளிலும் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கை அணியில் ... Read More »

பரபரப்பான முக்கிய ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரீஸ் வெற்றி!

உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பிரிவு 2 க்கு தெரிவுக்கான முக்கிய போட்டியில் பாடுமீன் சென்மேரீஸ் அணிகள் புத்தூர் எவரஸ்ட் மைதானத்தில் இன்று (31.07.2015) மோதிய போட்டியில் ஆட்டம் ஆரம்பம் ஆகியதில் இருந்து இரு அணி வீரர்களும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினானர். முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவுமின்றி சமநிலையான நிலையில் காணப்பட்டன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் சென்மேரீஸ் அணியினாரால் 1 வது கோல் போடப்பட்டு ஆட்டம் பரபரப்பான கட்டத்தினை நோக்கி தொடர்ந்தன. போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கையில் ... Read More »

Scroll To Top