Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு (page 5)

பதிவு வகை: விளையாட்டு

Feed Subscription

யாழில் சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு!

சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு! இதே பாதையில் சென்மேரீஸ் விளையாடுமானால் ..கிண்ணம் சென்மேரீஸ் வசமாகும். கம்பர் மலை மின்னொளியிலான உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் பலம் பொருந்திய மயிலங்காடு ஞானமுருகன் அணியினை 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறிது. சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு வீரர்கள் தமது பணிகளை திறம்பட செய்தார்கள். இதில் நாம் வரலாற்றில் காணாத நிகழ்வொன்றினை மைதானத்தில் நேற்று காணக்கூடியதாக இருந்தது. அதாவது சென்மேரீஸ் அணி ஞானமுருகன், றோயல், கென்றீஸ் மற்றும் பாடுமீன் அணிகளுடன் விளையாடும் போது ... Read More »

மரதனோட்டப் போட்டியில் 92 வயது மூதாட்டியின் சாதனை.

சாதனைக்கு வயதில்லை என்பார்கள், சாதனை புரிவதற்கு நோயும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், 92 வயது மூதாட்டி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பெயர் ஹரியட் தொம்ஸன் என்பதாகும். சன்டியாகோ நகரில் பிரசித்தம் பெற்ற மரதனோட்டப் போட்டியில் பங்கேற்றார், ஹரியட். குறித்த தூரத்தை ஏழு மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் மற்றும் 36 செக்கன்களில் அவர் ஓடிக் கடந்தார். ஒரு மரதனோட்டப் போட்டியை பூர்த்தி செய்த ஆகவும் வயது கூடிய வீராங்கனை என்ற பெருமை இந்த மூதாட்டிக்கு கிடைக்கிறது. இத்தனைக்கும் இவர் மூன்று தடவைகள் புற்றுநோயின் தீவிர தாக்கத்திலிருந்து ... Read More »

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் (ஸ்பெயின்)– அமெரிக்காவின் சோக் பலப்பரீட்சை நடத்தினர். இதில் நடால் 6–3, 6–1, 5–7, 6–2 என்ற செட் ... Read More »

உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெண்கலம்

உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மகளிர் ரீகர்வ் பிரிவு அரையிறுதியில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தென்கொரிய வீராங்கனை Ki Bo Bae-யிடம், தீபிகா தோல்வியடைந்தார். இதையடுத்து வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சர்வதேச தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்கொரியாவின் Chang Hye Jin-ஐ எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் 6-2 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி வென்றார். Read More »

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரேசிலின் ப்ரூனோ சோரஸ் இணை முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், சானியா மிர்சா- புருனோ சோர்ஸ் இணை, ஜெர்மனியின் லேனா கிரேன்பீல்டு, நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜெர் இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில், முதல் நிலை ஜோடியான சானியா இணை 2-6, 2-6 என்ற நேர்செட்களில் தோல்வியை தழுவியது. Read More »

தேசிய ரீதியில் கிளிநொச்சி பாடசாலை மாணவி டென்சிகா முதலிடம்!

இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வாண்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதேவேளை பளை மத்திய கல்லூரியில் இருந்து தேசிய மட்டப் போட்டியில் 20 வயது பிரிவில் உயரம் பாய்தலில் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவி சுகிர்தாவுக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பழைய  ... Read More »

அனலை லக்கி ஸ்ரார் துடுப்பாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

அனலை லக்கி ஸ்ரார் துடுப்பாட்ட அணி இறுதிப்போட்டியில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்திய துடுப்பாட்டப்போட்டியில் எமது அணி இறுதிப்போட்டிக்கு நுளைந்துள்ளது. 12 அணிகள் மோதிய இந்த போட்டியில் போட்டி அட்டவணை அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்று முதலில் ஊர்காவற்றுறை ஞானஒளி விளையாட்டுக்கழகத்தை வெற்றி பெற்று அரையிறுதியில் ஊர்காவற்றுறை கீறோ ஸ்ரார் அணியை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எமது துடுப்பாட்ட அணியில் காண்டீபன்-சுலக்சன்-தஜீவன்-நிரோஜன்-சுஜீவன்-விஜிதரன்-சாண்டில்யன்-அரிகரன்-அஜந்தன்-துஸ்யந்தன்-நியந்தன்-அனிருத்தன் ஆகியோர் விளையாடுகின்றனர். முதல் போட்டியில் சுலக்சன்-36 விஜிதரன்-12 ஓட்டங்களையும் இரண்டாவது போட்டியில் காண்டீபன்-28 ஓட்டங்களையும் ... Read More »

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2015

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள “The National Badminton Centre” Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் ... Read More »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!

உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் நீடிக்கின்றனர். உலகக் கோப்பை தொடரில் 2 சதங்கள் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க், முதன்முறையாக முதலிடத்தைப் ... Read More »

ரணில் இலங்கை அணிக்கு வழங்கிய அறிவுரை!

உலகக் கிண்ண தொடரில் விளையாடிவரும் இலங்கை அணிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தது மட்டுமன்றி தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி. டிவிலியர்ஸ் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் எமது நாட்டின் பெருமை’ எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் , இத்தொடரில் சிறப்பாக விளையாடிவரும் டிவிலியர்ஸ் மீது கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். பலவீன ங்களை கற்றுக்கொண்டு , வியூகங்களை அதற்கேற்ப வகுத்தால் வெற்றிபெற முடியும் பிரதமர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் உலக க் கிண்ண தொடரில் காலிறுதிச் ... Read More »

Scroll To Top