காலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கை

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்தவாரம் 7-ம் தேதி வெளியான படம் காலா. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘காலா’ திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.

Sharing is caring!