சந்தீப் கிஷன் ஜோடியாக பாலிவுட் நடிகை

அட்டகத்தி தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். சூப்பர் நேச்சுரல் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘லெக்ஸ் டலியானிஸ்’, ‘கைதி பேண்ட்’ ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்தவர் இவர். அன்யா சிங் நடிக்கும் முதல் தமிழ் படம் இது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு பதிப்பிலும் கருணாகரனே காமெடியனாக நடிக்கிறார்.

Sharing is caring!