செம க்யூட்… பிரகாஷ்ராஜ் மகனை பார்த்து ரசிகர்கள் வியப்பு

சென்னை:
பிரகாஷ் ராஜின் மகன் இவ்வளவு க்யூட்டா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவருக்கும் கிடைக்கும் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் ஆசை. இந்நிலையில் பிரகாஷ் ராஜின் மனைவியும், டான்ஸ் மாஸ்டருமான போனி தனது மகனின் ஒரு கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் பள்ளிக்கு கிளம்பிவிட்டார் என்று பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட் என்று கமெண்ட் செய்கின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!