தெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த அபிமன்யுடு

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் கடந்த மாதம் வெளியான இரும்புத்திரை வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் அப்படத்தை ஜூன் 1-ந்தேதி வெளியிட்டார் விஷால்.

தமிழில் படம் வெற்றி பெற்றதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படத்திற்கு தெலுங்கிலும் நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. இந்நிலையில், வைசாக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால், அபிமன்யுடு படம் இதுவரை ரூ.15 கோடி வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து படம் ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் அதிகப்படியாக வசூலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sharing is caring!