”ஸ்வர மௌலி” விருது வழங்கி கெளரவிப்பு

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மௌலி விருதை சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள் வழங்கி கௌரவித்தார்.

லதா மங்கேஷ்கர், இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், அவரது கலை பணிகளை பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மௌலி விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார்.

அப்போது லதா மங்கேஷ்கரின் சகோதரிகள் ஆஷா போஷ்லே, உஷா மங்கேஷ்கர் மற்றும் சகோதரர் ஹிரிதய்நாத் மங்கேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Sharing is caring!