40 நாளில் ஷுட்டிங் முடிக்க சுறுசுறுப்பு… இது ரஜினி படத்தின் அப்டேட்

சென்னை:
40 நாளில் ஷூட்டிங் முடிக்க படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது கார்த்திக் சுப்புராஜ் டீம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கடந்த 4ம் தேதி டார்ஜிலிங்கில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி 7ம் தேதி அங்கு சென்றார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

டேராடூன் மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கார்த்திக் சுப்புராஜும், அவரது டீமும் கடுமையாக உழைத்து வருகின்றனராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!