அதிகாலை .இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தின் போது சாரதி ர் ஸ்தலத்திலேயே பலி

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை .இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தின் போது சாரதி ர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் மணல் ஏற்றி சென்ற மற்றைய ரிப்பர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது..

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!