களுத்துறை மாவட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்கு உள்ளான களுத்துறை மாவட்ட மத்துகம, கீக்கியனகந்த தோட்டம், வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த, தொழிலாளர் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது.

தோட்ட நிர்வாகத்தினால் தலா 7 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டு மலையக புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு வீடும் தலா 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த வீடுகள் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு இலவசமாக கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!