சுய அர­சி­ய­லுக்­காக மைத்­தி­ரி­யும், ரணி­லும் வடக்கு மாகா­ணத்­தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்­ள­னர்

தங்­க­ளின் சுய அர­சி­ய­லுக்­காக மைத்­தி­ரி­யும், ரணி­லும் வடக்கு மாகா­ணத்­தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்­ள­னர். அத­னால் பெரும் விளை­வு­கள் ஏற்­ப­ட­வுள்­ளன.

இவ்­வாறு எச்­ச­ரிக்கை செய்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி. வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடை­பெற்­றது.

அதில் சிங்­கள, முஸ்­லிம் சிறப்­புச் செய­லணி தொடர்­பான பிரே­ர­ணையை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் கொண்டு வந்­தார். அந்­தப் பிரே­ரணை மீதான விவா­தத்­தின்­ போதே உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது,-
வடக்கு மாகாண அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் புறந்­தள்­ளப்­பட்­டுள்­ள­னர். மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார். இது வர­வேற்­கத்­தக்க விட­யம்­தான். ஆனால் அதற்­குள்­ளும் சூழ்ச்­சி­கள் உள்­ளன.

மாகாண சபை­யின் ஆட்­சிக் காலம் இன்­னும் சில மாதங்­களே உள்­ளன. மாகாண சபை­யின் ஆயுள் முடிந்­தால் முத­ல­மைச்­ச­ரை­யும் புறந்­தள்ளி வைத்­து­விட்டு எதை­யும் செய்­ய­லாம் என்ற உள்­நோக்­கமே இந்த நட­வ­டிக்­கைக்­குக் கார­ணம்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பில் அண்­மை­யில் வந்து ஆராய்ந்­தார். பல மாவட்­டங்­க­ளுக்­கும் சென்­றார். யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­த­போது சுய­ந­லத்­து­டன் கருத்­துக்­க­ளைக் கூறி­விட்­டுச் சென்­றார்.

தலைமை அமைச்­சர் ஒரு­பு­ற­மும், அரச தலை­வர் ஒரு­பு­ற­மும் தமது சுய அர­சி­ய­லுக்­காக வடக்கு மாகா­ணத்­தைக் குத்­த­கைக்கு எடுத்­துள்­ள­னர் என்றே எண்­ணத் தோன்­று­கின்­றது. இது மாகா­ணத்­தில் பெரும் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். – என்­றார்.

Sharing is caring!