ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு 3000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு 50000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sharing is caring!