பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

எரிபொருள் விலை அதிகரிப்பட்டதைத் தொடர்ந்து 20 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!