மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது

கொழும்பில் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பியகம, பன்னிபிட்டிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 7 மணி முதல் சுமார் 5 நேரத்திற்கு பத்தரமுல்ல, பன்னிபிட்டிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, மஹரகம, தெஹிவளை கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டிருந்தது.

Sharing is caring!