980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அனுமதி

சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து தாக்கல் செய்தனர்.

அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களின் தகுதிக்கமைய கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்வதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு அனுமதி கிடைத்ததாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

Sharing is caring!